ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது Washington, DC, USA 54-0624 1ஓ, என்னே ! அங்கே, இரண்டு பரிசுத்த ஆவிகள் கிடையாது. அன்றிரவு, அல்லது அந்த காலையில், சிமியோனை இயேசு கிறிஸ்துவண் டைக்கு வழி நடத்தின, அதே பரிசுத்த ஆவியானவர், இன்றிரவு , இங்கே, உங்களை வழி நடத்தியிருக்கிறார், ஏனென்றால், 'பரிசுத்த ஆவியின் வாக்குத்தத்தத்தை நீங்கள், விசுவாசிக்கிறபடியினால் அவர், அன்று, சிமியோனுக்கு அனுகிரகம் செய்தது போன்று, அதேவிதமாக, உங்களுக்கும் செய்ய அவர் கடமைப்பட்டுள்ளார். ஏனென்றால், அவர் தேவனாயிருக்கிறார், அவருடைய வார்த்தையை அவர் காத்துக்கொள்ள வேண்டியவராயிருக் கிறார். அப்பொழுது, சிமியோன் தவிப்புடையவனாய், கிறிஸ்துவை காண வாஞ்சித்ததை, என்னால், யூகித்து பார்க்க முடிகிறது. தேவனுடைய வார்த்தை, அவனிடத்தில் என்ன கூறினதோ, அதை அவன் விசுவாசித்தான். குறை கூறுபவர்கள் என்ன கூறினாலும், அதை அவன் அக்கரைகொள்ளாமல், தேவனுடைய வார்த்தை கூறியிருந்ததையே விசுவாசித்தான். கிறிஸ்துவை காணவேண்டுமென்ற ஏக்கம், அவன் உள்ளத்தில் இருந்தது, காணுவேன், என்று அவன் விசுவாசித்தான். தாவீது “ஆழத்தை ஆழம் கூப்பிடும்போது” என்று கூறினதுபோன்று, இங்கே இருக்கின்ற உங்களில், அநேகருக்கு தெய்வீக சுகத்தில் நம்பிக்கை இருக்கிறது அல்லவா? தெய்வீக சுகத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா? நீங்கள், தெய்வீக சுகத்தை விசுவாசிக் கின்றதின் காரணமே, தெய்வீக சுகம் என்று ஒன்று இருக்கிறது, என்பதை நிரூபிக்கிறது. 2நாங்கள், அமெரிக்காவிற்கு வந்தபோது, அமெரிக்க இந்தியனை கண்டோம். அவன் சூரியன், சந்திரன் மற்றும் இயற்கை முதலானவைகளை ஆராதித்து வந்தான், ஏனென்றால், அவன் ஒரு மானிடனாய் இருந்த படியினால் அவனுக்குள், உருவாக் கினவர் ஒருவர் உண்டென்பதை அறிந்திருந்தான், எனவே, அந்த மனித இருதயத்திற்குள், ஏதோ ஒன்று இருந்து, அவனை ஆராதனை செய்ய வைக்கிறது. அது, அழிந்து போகிற ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு. நீங்கள், உங்கள் மோட்டார் வாகனத்தையோ, உங்களுடைய உத்யோகத்தையோ, உங்களுடைய வீட்டையோ, அல்லது ஏதாவது ஒரு காரியத்தை ஆராதிக்கக்கூடும். நீங்கள், ஏதோவொன்றை ஆராதிப்பீர்கள், எனவே, அங்கு ஏதாவது விக்கிரகமாக இருக்குமாயின், அதை வெளியே எடுத்துபோட்டு, இயேசு கிறிஸ்துதாமே முதலிடத்தை வகிக்கும்படி செய்யுங்கள். அவர் எல்லாவற்றிலும், முதன்மையான இடத்தை பெற்றவ ராய் இருக்கட்டும். 3அந்த பசி, ஆழம்... தாவீது சொன்னதுபோன்று “உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது...” (சங்கீதம் 42:7). இப்பொழுது, ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது .... உதாரணமாக, இங்கே ஒரு ஆழமானது. இருந்து கூப்பிட்டுகொண்டு இருக்குமானால், அந்த அழைப்பிற்கு பதிலளிக்க, அங்கே ஒரு ஆழம் இருக்கத்தான் வேண்டும். நான் இவ்விதமாக, அதை சற்று தெளிவுபடுத்தி கூறட்டும். நான் இயற்கையை பெரிதும் நேசிக்கிறவன்; நான் காட்டுக்குள்ளாக போகும்போது சூரியன் அஸ்தமனமாவதை கவனிப்பேன். காட்டுமிருகங்களின் கூச்சல் சத்தத்தை கூர்ந்து கேட்பேன். என்னுடைய தாயார் பாதி சிவப்பு இந்தியர். அது சம்பந்தமாக, என்னு டைய இரத்தத்தில் இயற்கையை குறித்து ஏதோ இருக்கிறது, அதாவது, நான் அதை நேசிக்கிறவன். காட்டிலிருந்து அந்த சத்தத்தை நான் கேட்கும்போது, அங்கே ஏதோ ஒரு காரியம் என்னுடைய ஆத்துமாவை அனல் மூட்டுகிறது. என்னால், அதை தவிர்க்க முடியாது. 4இங்கே, சமீபத்தில் நான், காலோரோடாவில் ஒரு உயரமான மலையின் மேலிருந்து, ஒரு வயதான தாய் கழுகை கவனித்துக் கொண்டிருந்தேன், அந்த தாய் கழுகானது, தன் குஞ்சுகளை தன் செட்டைகளின் மேல் சுமந்துகொண்டு வந்து, நல்ல புல் தரையிலே அவைகளை விட்டுவிட்டு, அங்கிருந்து பறந்துபோய், மிகவும் உயரமான, ஒரு மலை உச்சியில்போய் அமர்ந்து கொண்டது. அங்கிருந்து கொண்டு, அவள், தன் குஞ்சுகளை கவனிக்க துவங்கினாள். நானும் என்னுடைய தூரதரிசினி கண்ணாடியின் மூலமாய் இவைகளை கவனித்துக்கொண்டிருந்தேன்; என்னுடைய குதிரையை ஒரு மரத்தில் கட்டிவைத்துவிட்டு, அதையே கவனித்துக் கொண்டிருந்தேன். நான், “கர்த்தாவே, இது அதிக பிரீதியாயிருக் கிறது” என்று சொல்லி, நான் அதை நுகர்வதுபோன்று கூட உணர்ந்தேன். 5நீங்கள், எப்பொழுதாவது கழுகின் கூட்டண்டைக்கு போயிருக்கிறீர்களா? கூர்மையான குச்சிகள் முதலான காரியங்களை கொண்டுதான் அவைகள் கூடுகளை கட்டுகின்றன. அந்த சிறுகுஞ்சுகள், அந்த முட்கள் உள்ள குச்சிகளின்மேல் தான் நடக்கும் அதை தவிர்த்து அவைகளுக்கு வேறொன்றும் தெரியாது. ஆனால், ஒரு நாள் தாய் கழுகு, தன் செட்டைகளை விரித்து, அவைகளை அதன் செட்டைகளின் மேல் ஏற்றிக்கொண்டு கீழே இறங்கி வந்து விட்டது. இப்பொழுது, நான் அந்த குஞ்சுகளை கவனித்தேன், அவைக ளுக்கு, ஒரு பெந்தெகொஸ்தே எழுப்புதல் நடந்துகொண்டிருந்தது. அந்த மிருதுவான புல் தரையின்மேல் அவைகள், அங்குமிங்கும் ஓடிக்கொண் டும், பொருக்கிகொண்டும், ஒன்றை யொன்று கொத்திக்கொண்டும், ஒன்றின் மேல் ஒன்று ஏறிக்குதித்துக் கொண்டும், அவ்வளவு சுதந்திரமாக இருந்தன. 6நான், நல்லது, அதெல்லாம் சரிதான் என்று நினைத்தேன். உலகத்தின் பழைய கூடுகளில் இருக்கின்ற, மனிதனை போன்று இது இருக்கிறது , பிசாசு, அவனுக்கு கொடுப்பது தவிர, வேறொன்றும் தெரியாது. ஆனால், ஒருநாள், தேவன் அவனை தூக்கி எடுத்து, அவனை நிழலான பசும்புல் தரையின்மேல் கிடத்தினார். ஓ, எப்படியாய் அவன் களிகூறுகிறான்; அவன் சுயாதீனமானவனாய் இருக்கிறான், அங்கே, தீங்கு செய்ய ஒன்றுமே இல்லை. ஏன், அந்த சிறிய குஞ்சுகள் பயமேயில்லாமல் இருக்கின்றது, என்று நான் நினைத்தேன்? அவைகள் தங்களை சுற்றிலும் இருக்கின்ற ஓநாய்கள், தங்களை தூக்கிகொண்டு போய்விடும் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறதே, என்று வியந்தேன்? ஆனால், அடிக்கொருதரம் அவைகள் மேலே நோக்கிப்பார்க்கும். அந்த வயதான தாய் கழுகு, அங்கே, உயரே உட்கார்ந்துகொண்டு, அவைகளை கவனித்துக் கொண்டே இருந்தது. நான், நல்லது, தேவனுக்கு துதி உண்டாவதாக! அது சரியே! உலகத்தின் கூட்டிலிருந்து அவர் என்னை வெளியே எடுத்து, அவர் மகிமையின் அரணாகிய கொத்தளங் களின் மேல் ஏற்றிவைத்து, அங்கே உயரத்தில் உட்கார்ந்துகொண்டு, அவருடைய சுதந்தரத்துக்கு ஒரு தீங்கும் வராதபடி, காத்துக்கொண்டி ருக்கிறார். என்று நான் சிந்தித்தேன். ஒருகால் ஓநாய், அந்த சிறு கழுகு குஞ்சுகள் இருக்கிற அந்த பக்கமாய் வர ஆரம்பித்தால், அந்த தாய் கழுகு அதன் நகங்களால் அதனை கிழித்தே கொன்றுவிடும். அது சரி, சாத்தான் ஒரு விசுவாசியை பின் தொடர்ந்தால், அவனுடைய கரத்தில் இயேசு கிறிஸ்துதான் அகப்படுவார். அது சரி, ஆம், அவன் அவரை பிடித்து பார்க்கட்டும்!... கொஞ்சங்கழித்து, அந்த தாய் கழுகு கவனித்துக் கொண்டிருந்தது, அவளுடைய மகத்தான கெம்பீரமான தலையைத் உயர்த்தி சுற்றிப்பார்த்தது. அவள் மிக உயரமான சிகரத்தின்மேல் அமர்ந்திருந்தாள், ஏனென்றால், அங்கிருந்து எல்லாவற்றையும் பார்க்கமுடியும். அவளுடைய கூர்மையான கழுகு கண்கள் கவனித்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் கழித்து, அவள் தன் தலையை உயர்த்தினதை நான் கண்டேன். என்னுடைய பத்து மடங்கு சக்தி வாய்ந்த தொலைநோக்கியின் மூலமாக, அவள் தன் தலையை உயர்த்தி, சுற்றி பார்க்கிறதை நான் கண்டேன், அப்பொழுது, அங்கிருந்து அவள் பறக்க துவங்கினாள். நான் அது என்ன என்று எண்ணினேன். 7“எங்கோ தொலைவில், வடபாகத்தில், ஒரு வடதிசை காற்று துவங்கியது; இடி முழங்கினது. அவள் ஒரு கூச்சலிட்டு நேராக பறந்து கீழே வந்து, தன் செட்டைகளை புல் தரையின் மேல் விரித்ததும், அந்த கழுது குஞ்சுகள் ஒவ்வொன்றும், வேகமாய் அதன் செட்டைகளின் மேல் ஏறிக்கொண்டது. ஒருகால் கூண்டை விட்டு புறப்படும்போது, அவைகளுக்கு எப்படியாய் சொல்லித்தரப் பட்டதோ, அப்படியே நடந்துகொண்டது. அவைகளுடைய சிறிய கால்களால் சிறகுகளை கெட்டியாக பிடித்துக்கொண்டன. அவைகளுடைய, வாயை கீழாக கொண்டுபோய், அதன் அலகுகளால் இறகுகளை கெட்டியாக பிடித்துக்கொண்டன. உடனே, அந்த தாய் கழுகுதன் குஞ்சுகளை, செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு, நேரடியாக உயரே எழும்பி, 50 மைல் வேகத்தில் அடிக்கும் காற்றைக் கிழித்துக்கொண்டு, நேராக கன்மலை வெடிப்புக்குள் சென்று மறைந்தது. நான், “ஏதோ ஒரு மகிமையின் நாளிலே இந்த எழுப்புதலெல்லாம் ஓய்ந்த பிறகு, அவர் மகிமையிலிருந்து வந்து, அவருடைய மகத்தான வல்லமையின் செட்டைகளை விரிப்பார், அப்பொழுது இந்த சிறிய கழுகு குஞ்சுகள், அவைகளின் அலகுகளால் செட்டைகளை இறுக பற்றிக்கொண்டு, அவரோடுகூட, மகிமைக்கு பறந்து போவோம்” என்று நினைத்து, ஒரு சிறு குழந்தையை போல அழத் தொடங்கினேன். 8ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது: ஆழம் கூப்பிடுமானால், அதற்கு பதிலளிக்க அங்கே ஒரு ஆழம் இருக்கத்தான் வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறினால், பூமியின் மேல் ஒரு மரம் வளர்வதற்கு முன்னதாக, வளர்வதற்கென்று ஒரு பூமியானது இருக்கத்தான் வேண்டும். தேவன் மரத்தை பூமிக்காக உண்டாக்கவில்லை, அவர், பூமியை மரத்துக்காக உண்டாக்கினார். அவர் பூமியை உண்டாக்கி, ஒரு மரத்தை முளைக்கபண்ணு, என்று பூமிக்கு கட்டளையிட்டார். பூமியானது மரத்தை அழைத்துக் கொண்டேயிருந்தது, எனவே மரமானது உண்டாயிற்று. மீனின் முதுகின் மேல் ஒரு துடுப்பு உண்டாவதற்கு முன்னே, அது நீந்தி விளையாட அதற்கு தண்ணீர் உண்டாயிருக்கவில்லை. அதற்கு ஒரு துடுப்பு இருக்கின்ற காரணமென்னவென் றால், அதை உபயோகப்படுத்தி நீந்திச்செல்ல அங்கே தண்ணீர் இருந்தபடியினாலேயே தான். நமக்கு உண்டாயிருக்கின்ற எல்லா காரியமும், ஒரு நோக்கத்திற்காகவும், ஒரு காரணத்திற்காகவும் தான் இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்பு, ஒரு சிறு பையன் பென்சிலிலுள்ள ரப்பரை சாப்பிடுகிறான், என்ற ஒரு செய்தியை நான் படித்தேன். அவனுக்கு கிடைக்க கூடிய பென்சில் ரப்பர்களையெல்லாம் தின்று விடுவானாம். சில சமயங்களில் சைக்கிளின் கால் மிதியை கூட பெடல்) தின்று விடுவானாம். இந்த பையனின் கோளாறு என்னவென்று அவர்களுக்கு தெரியவில்லை. எனவே, அவர்கள், அவனை வைத்தியரிடம் பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அவனை, அவர்கள் நன்றாக பரிசோதனை செய்த பிறகு, அந்த சிறு பையனின் சரீரத்திற்கு கந்தகம் தேவைபடுகிறது என்பதை கண்டுபிடித்தனர். ரப்பரில் கந்தகம் இருக்கின்றது, அந்த கந்தகத்தை பெறும்படியாக, அவன் ரப்பரை தின்றுக்கொண்டிருந்தான். இப்பொழுது, அதுதான் காரியம், இதை பிடித்துக்கொள்ளுங்கள்; இங்கே, உள்ளே ஏதோ காரியம் கந்தகம் வேண்டுமென்று கூப்பிடுமானால், அது கூப்பிடுவதற்கு முன்பாகவே, அதற்கு பதிலளிக்க, அங்கே கந்தகம் இருந்தாக வேண்டும். பாருங்கள், நான், சொல்வது உங்களுக்கு புரிகின்றதா? 9இப்பொழுது, ஆழத்தை ஆழம் கூப்பிடும்போது, ஒரு ஆழம் கூப்பிடுவதற்கு முன்னதாக, அதற்கு பதிலளிக்கும்படியாக, அங்கே, ஒரு ஆழம் இருக்கத்தான் வேண்டும். அவ்வளவு நிச்சயமாக.... இப்பொழுது, இங்கே இருக்கின்ற ஜனங்களாகிய நீங்கள், சில வருடங்களுக்கு முன்னதாக, பாவிகளாக இருந்திருக்கலாம், ஒருக்கால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை விசுவாசிக்காத, ஏதோ ஒரு சம்பிரதாய சபையில் நீங்கள் இருந்திருக்கலாம். ஆனால், நீங்கள் செய்தியை கேட்டீர்கள். உங்களுக்குள்ளாக, ஏதோ ஒரு காரியம் அதிகமாய் தேவனை பெற்றுக்கொள்வதற்காக கூப்பிட்டது. ஒருக்கால் நீங்கள் தேவனுக்கு முன்பாக, நீதிமானக்கப்பட்ட நிலையில் ஜீவித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுக்கோ, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தேவையாயிருந்தது. அதின் பேரில் நீங்கள் பசியாயிருந்தீர்கள். இப்பொழுது, பரிசுத்த ஆவி ஒன்று இருப்பதற்கான காரணமென்னவென்றால், நீங்கள் அதின் பேரில் பசியாயிருக்கிற தினால் தான். இங்கே ஏதோவொன்று, அங்கு இருக்கிற காரியத்துக்கு அழைக்கவில்லை யெனில், அதற்காக, பசியாய் இருக்க முடியாது. நான் என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிகின்றதா? அடுத்தபடியாக, இன்றிரவு, நீங்கள் இங்கு இருப்பதற்கான காரணமே, தெய்வீக சுகத்தில் உங்களுக்குள்ள விசுவாசமே. ஒரு வேளை, இந்த காரியம் வேதத்தில் போதிக்கப்படாமல் விடப்பட்டதாக வைத்துக்கொள்ளுங்கள், ஒரு கூட்ட ஜனங்கள், தெய்வீக சுகத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்றால், அங்கு எங்காவது ஒரு ஊற்று திறந்திருக்கவே வேண்டும் இல்லையென்றால், அந்த வாஞ்சையே உங்களுக்கு இருந்திருக்காது. தேவனால் சுகமாக்கப்பட வேண்டும், என்ற வாஞ்சை, உங்களுக்குள் பெற்றிருந்தால், உங்களை சுகப்படுத்த அங்கே ஒரு தேவன் இருக்கிறார், அது உண்மை. ஏனென்றால், ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. 10சிமியோன் விஷயத்திலும், இவ்வித மாகத்தான் இருந்தது, கிறிஸ்து என்ற ஒருவர் வருகிறார், என்று அவன் அறிந்திருந் தான். அவன் மரிப்பதற்கு முன்பாக, அவரை அவன் காணுவான், என்று தேவன் அவனுக்கு வாக்களித்திருந்தார், என்பதை அவன் அறிவான். இப்பொழுது, கவனியுங்கள். அப்படியானால், சிமியோன் நடத்தப்பட்டது போல.... அது வினோதமா யில்லையா, இயேசுவானவர் காட்சியில் வந்தபோது, அந்த வாக்குத்தத்தை கொடுத்த, பரிசுத்த ஆவியானவரால், சிமியோன் சரியாக , கிறிஸ்துவன்டைக்கு நடத்தப்பட்டான். தெய்வீக சுகத்தை, வாக்குத்தத்தமாய் அளித்த பரிசுத்த ஆவியானவர், இன்றிரவு, சரியாக, இப்பொழுதே, விருப்பமுள்ள எவரும், பருகதக்கதான திறந்த ஊற்றண்டைக்கு, உங்களை சரியாக நடத்தியுள்ளார். உங்களை நேராக, அந்த ஊற்றன்டைக்கு நடத்தியுள்ளார். அதே பரிசுத்த ஆவியானவர், தேவனுடைய வாக்குத்தத் தத்தை விசுவாசிக்கிற, தேவனுடைய குமாரர்களை நடத்திக் கொண்டிருக்கிறார். நான் என்ன சொல்லுகிறேன், என்று உங்களுக்கு புரிகின்றதா? தேவனுடைய குமாரர்களும், குமாரத்திகளுமாகிய நீங்கள் ஒவ்வொ ருவரும், தேவனுடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிறபடியால், இங்கே நடத்தப்பட் டிருக்கிறீர்கள். ஓ.. அதைக் குறித்து நான் நினைக்கும்போது! 11பின்னர், அங்கே, அந்த மூலையில் ஒரு வயதான ஸ்திரீ இருந்தாள், என்று நினைக்கிறேன். அவள் பார்வை இழந்தவள் என்றும், அவள் பெயர் அன்னா என்றும், நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். அவள் ஒரு தீர்க்கதரிசினி, கர்த்தருடைய வருகைக்காக காத்துக்கொண்டிருந்தவள். கிறிஸ்துவை அவளுக்கு காண்பிக்க, தேவன் கடமைப்பட்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர், அன்னாளின் மேல் அசைவாடினார். அந்த பார்வை இழந்த, வயதான தீர்க்கதரிசினி, அந்த காலை வேளையில், அந்த கட்டடத்தின் ஊடாக, பார்வையற்றவளாய், பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டவளாய், அந்த ஜனங்களோடுகூட வருகிறதை, என்னால் காணமுடிகின்றது. அவள், பெண்களின் வரிசையின் ஊடாக கடந்து, சரியாக, அந்த ஜீவ ஊற்றின் முன், வந்து நின்றாள். எனென்றால், அவள் பரிசுத்த ஆவியினால் நடத்தப்பட்டாள். 12ஆம், அவர் இன்றிரவு, இங்கே இருக்கிறார். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார், பரிசுத்த ஆவியா னவர், இங்கே ஒன்றாக சேரும்படி உங்களை இழுத்திருக்கிறார். நீங்கள் இன்றிரவு, இங்கு இல்லையென்றால்... பரிசுத்த ஆவியானவர் உங்களை, இங்கு கொண்டுவரவில்லை யென்றால், நீங்கள் உலகத்தில் எங்கேயோ இருந்திருப்பீர்கள். ஆனால், இங்கே இந்த வெப்பமான கட்டடத்திற்குள் உட்கார்ந்து, விசிறிக்கொண்டு இருக்கிறீர்கள், ஏனென்றால், நீங்கள், இயேசு கிறிஸ்து , காட்சியில் வந்து, அவருடைய வார்த்தை யை உறுதிபடுத்துவதை, காணும்படி, எதிர்பார்க்கிறீர்கள். எதிர்பார்க்குதல். 13வெறுமனே, ஏதாகிலும் குறையை கண்டுபிடிக்க வேண்டுமென்ற, எதிர்பார்ப் போடு நீங்கள் வந்திருப்பீர்களானால், நிச்சயமாகவே, பிசாசு அநேக குறைகளை உங்களுக்கு காட்டுவான். அவன் நிச்சயமாய் காட்டுவான். நீங்கள் எதிர்பார்க்கிறதை பெற்றுக்கொள்வீர்கள். நல்லது, இப்பொழுது, “நான் மட்டும்... ஜெபவரிசையில் இருந்து அதை பெறாமல் போனால்... அவ்விதமான ஏதோ ஒன்றை நான் பார்த்தால் அப்பொழுது தான் விசுவாசிப்பேன்” என்று, அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் எதை எதிர்பார்கிறீர் களோ, அதை பெற்றுக்கொள்வீர்கள். “இன்றிரவு, இந்த கட்டிடத்தில், அவருடைய மகிமை ஊற்றப்பட்டு, அநேகர் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானத்தை பெற்றுக்கொண்டு, கல்வாரி பாதையை நோக்கி, பாவிகள் அழுதுகொண்டுபோக, வியாதியஸ்தர்கள் சுகமடைந்து, எல்லா விதமான அற்புதங்களும், அடையாளங் களும், நடக்கும்படியாக, பரிசுத்த ஆவியானவர், அவருடைய சொந்த வல்லமையில் வந்து, பிரத்தியட்சமாவதை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், ஏனெனில் இயேசு கிறிஸ்து, அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். நான் அவருடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக் கிறேன். 14நாம் ஜெபம் செய்வோமாக, பரலோக பிதாவே, உம்முடைய வார்த்தை சத்தியமாயிருக்கிறது போல, உயிர்த்தெழுந்த இயேசுவின், அற்புதங்க ளினாலும், அடையாளங்களினாலும், உம்முடைய வார்த்தையை உறுதிப்படுத் தும். அவர் இந்த பூமியின்மேலிருந்தபோது, அவர் தன்னை ஒரு மகத்தான நபர், என்று உரிமை கோரவில்லை. என்ன செய்ய வேண்டும் என்று, தரிசனத்தில் நீர் (அவர்) காண்பித்தாரோ, அதை மட்டுமே உரிமை கோரினார், என்பதை, நாங்கள் அறிந்திருக்கிறோம். ஜனங்களின் சிந்தனைகளையும், அவர்களுடைய நிலைகளையும், அவர் அறிந்திருந்தார். உதிரபோக்குள்ள அந்த ஸ்திரீ, அவருடைய வஸ்திரத்தை தொட்டதை. அவர் அறிந்திருந்தார். அவள் அங்கே, வெளியே நின்றுக்கொண்டு, மறைத்துக்கொள்ள முடியாது, என்பதை கண்டாள். ஏனென்றால் இயேசு சரியாக, அவளையே நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு தெரியும். “உன்னுடைய விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்று கூறினார். மேலும், பிதாவே, இன்றிரவு, அவர் இங்கே இருக்கிறார், என்று நாங்கள் அறிவோம். ஏனென்றால், இருப்பேன் என்று அவர் வாக்களித்திருக்கிறார். எங்களுடைய, திட நம்பிக்கை அவருக்குள்ளும், அவருடைய வார்த்தைக்குள்ளும், நங்கூரம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. இங்கே, பூமியின் மேல், அவருடைய மகத்தான உயிர்தெழுத லின் பிரத்தியட்சத்திலும், அவருடைய சபையில், அவருடைய ஜனங்கள் மத்தியில், கிரியை செய்கிறதிலும், அவரை நாங்கள் கண்டிருக்கிறோம், என்ற நிச்சயமுடையவர்களாய் இருக்கிறோம். கர்த்தாவே, இன்று நாங்கள் இந்த காலத்தினுடைய வெளிச்சத்தை கொடுக்கிறவர்களாக இருப்போமாக. அதாவது, பாதையின் முடிவிலே, அந்த மகத்தான நாடகத்தில் நிறுத்தப்பட்டு, நாங்கள் ஒவ்வொருவரும் உமக்கு முன்பாக வரும்போது, அந்த மகத்தான திரையானது இழுக்கப்பட்டு, இந்த சந்ததியில் உள்ள எங்கள் ஜீவியங்கள், எங்களுக்கு முன்பாக திரும்ப கொண்டுவரப்படும்போது, தேவனே அநீதியை எதிர்த்து சத்தமிடுகிறதும், உம்முடைய குமாரனாகிய இயேசுவின் மேல் விசுவாசம்கொள்ளும்படி, ஜனங்களை அழைக்கிறதுமான, என்னுடைய சத்தத்தை, நான் கேட்கும்படி செய்வீராக. 15இன்றிரவு, இங்கே இருக்கின்ற ஜனங்களை ஆசீர்வதியும், அவர்கள் இங்கே பயங்கரமான உஷ்ணத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நீர் அவர்களுக்கு விஷேசமான ஆசீர்வாதத்தை அருளும் படியாய், நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியின், தேற்றும் வல்லமையானது, இப்பேர்பட்டதான எல்லா எண்ணங் களையும் எடுத்துப்போடுவதாக. கர்த்தாவே உம்முடைய ஊழியக்காரனை, இப்பொழுது, வர இருக்கின்ற கூட்டங்களுக்காக பரிசுத்தப்படுத்தும். எல்லோருடைய கண்களும் இந்த பக்கமாய் திருப்பப்படும், என்பதை உணர்ந்தவனாக, இங்கே நின்றுக்கொண்டிருக்கிறேன். பிதாவே, உம்முடைய மகத்தான மகிமைபொருந்திய வல்லமையை, யாவரும் அறியும்படியாய் செய்யவேண்டுமென்று, தாழ்மையோடு நான் ஜெபிக்கிறேன். இன்று தகுதியற்ற ஊழியக்காரனாகிய எனக்கு, உம்முடைய பார்வையில் தயை கிடைக்குமானால், இந்த தகுதியற்றவனை, இன்றிரவு அப்புறப் படுத்தி, நீர் உள்ளே வந்து, கர்த்தராகிய இயேசுவே, உம்முடைய ஜனங்களிடத்தில் பேசுவீராக. 16இங்கே, பூமியின் மேல் ஜீவியம் யாவும் முடிந்து, கடைசி ஜெபம் ஜெபிக்கப்பட்டு, யுத்தங்கள் யாவும் ஓய்ந்து, புகைகாய்ந்து அற்றுப்போய், தளவாடங்கள் யாவும் அடுக்கி வைக்கப்பட்டு, வேதாகமம் மூடப்பட்டு, நாங்கள் உம்முடைய வீட்டிற்கு வரும்போது... அந்த கவிஞன் பாடின வண்ணமாய், அந்த அழகான, மகத்தான, நித்தியமான, பிரகாசமான, காலை வேளை பிறக்க, தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள், வானங்களுக்கு அப்பால் உள்ள, அவர்களுடைய வீட்டிற்கு கூட்டி சேர்க்கப்படும்போது... கர்த்தாவே, அந்த மகத்தான மேசையானது, ஆயிரக்கணக்கான மைல்கள் நீளத்திற்கு, விருந்திற்காக விரிக்கப்பட்டு, யுத்தத்தில் காயம்பட்ட வீரர்களாய், ஆனந்த கண்ணீர், எங்களுடைய கன்னங்களில் வடிய, மேசையின் ஊடாக ஒருவரையொருவர் நோக்கிபார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்... அங்கே, அழகும், பரிசுத்தமும், நிறைந்தவராய் ராஜாவானவர் வெளிப்பட்டு, அந்த மேசையின் ஊடாக கடந்து வந்து, தன்னுடைய சொந்த கரங்களால், எங்கள் கண்களிலிருந்து வழிந்தோடும் கண்ணீரை துடைத்து, இனி ஒருபோதும் அழாதீர்கள், அதெல்லாம் முடிந்தது. கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசியுங்கள், என்று சொல்லுகிறதை, நாங்கள் பார்க்கிறோம். பிதாவே, நாங்கள் பாதையின் கடைமுனைக்கு வரும்போது, எங்கள் பாதையில் உண்டாயிருந்த பாடுகள் எல்லாம், எங்களுக்கு ஒன்றுமில்லாத்தாய் காணப்படும். அந்த கடந்துபோன காரியங்கள் யாவற்றையும், நாங்கள் மறந்து, பரம அழைப்பின் லக்கை நோக்கி முன்னேறிப்போக, கர்த்தாவே, இன்றிரவு எங்களுக்கு உதவிச்செய்யும். ஒரு அழிவுள்ளவனாக இருந்துகொண்டு, நீர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர், என்று இவர்களுக்கு சொல்ல, நான் முயற்சித்துக்கொண்டிருக்கும் வேளையில், உம்முடைய ஆவியானவர் இங்கே வந்து, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, இந்த ஜனங்களுக்கு பிரத்தியட்சபடுத்துவாராக. உம்முடைய நேசக் குமாரனாகிய, இயேசுவின் நாமத்தில் இதை கேட்கிறோம், ஆமென்... 17கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றிரவு சுகமளிக்கும் ஆராதனைக்கு சற்று முன்பாக ..... சிறுபிள்ளைத்தனமாக இருந்ததிற்காக என்னை பொருத்துக்கொள்ளுங்கள். ஆனால், அவரைக்குறித்து பேசும்போது, ஏதோ காரியம், என் இருதயத்திற்குள் வந்துவிடுகிறது. எனக்கு தரிசனங்கள், சிறுகுழந்தை பருவத்திலிருந்தே வருகிறது, என்பதை கண்ட ஊழியக்காரர்கள், அப்பொழுதே, என்னை முதலாவதாக அழைத்தது, எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் என்னிடம், பில்லி, நீ அதற்கு போகவேகூடாது, அது சாத்தான், என்றார்கள். அதை எனக்கு சொன்னவர்கள், அங்கி அணிந்த மத குருமார்களாய் இருந்தபடியினால், தரிசனங்கள் வருவது தவறானதாக இருக்கலாமோ, என்று நான் சந்தேகப்பட்டேன். அதற்கு பிறகுதான் அன்றிரவு, அவர், என்னிடத்தில் வந்து, அவர் யார், என்பதை எனக்கு, எடுத்து சொன்னபோது... ஓ, என்னே . சரியாக , இப்பொழுது, அவர் இங்கே இருக்கிறார் என்பதை, நான் அறிவேன். நான் அவருடைய பிரசன்னத்தையும், அவரை நேசிக்கிறேன் என்பதையும், நான் அறிவேன். நான் ஒரு பிசாசாய் இருந்துகொண்டு எப்படி இந்தவிதமாய், கர்த்தராகிய இயேசுவை நேசிக்க முடியும்; அவருக்காக, எப்படியாய், என் இருதயம் கசிகிறது என்பதையும், என் இருதயத்தையும், அவர் அறிவார், என்று நான் சிந்தித்தேன். மேலும், அவர் வந்து, வித்தியாசமாய் என்னிடம் சொன்னார். நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற இந்த நாளில், நான் அவரை விசுவாசிக்கிறேன், ஏனென்றால், அது தேவனுடைய வார்த்தையோடு ஒத்துபோகிறது. ஆனால் அவர்களுடைய வார்த்தை தேவனுடைய வார்த்தையோடு ஒத்துபோகிறதில்லை . 18இப்பொழுது, கிறிஸ்தவ நண்பர்களே, உங்கள் யாவருக்கும் சொல்லவேண்டு மென்று விரும்புகிறேன், ஏனென்றால், எனக்கு அது சம்பவிக்கும்போது, என்ன நேர்ந்தது என்று சில சமயங்களில், நீங்கள் வியப்படையலாம். என்னால் அதை விளக்கிச் சொல்ல முடியாது; அதை விளக்குவது என்பது, எனக்கு அப்பாற்பட்ட தாயிருக்கிறது. ஆனால், நான் ஒன்று இரண்டு பேரை சந்திப்பதற்குள், அவ்வளவு பலவீனமாய், என்னால் நிற்க முடியாமல் போகிறது. உங்களால் அதை புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். ஆனால், வெறுமனே வேத வாக்கியங்களை வாசியுங்கள்; அவைகள் அதை அறிவிக்கிறது. 19நான் நம்புகிறேன், தானியேல், ஒரு தரிசனத்தை கண்டு, என் தலையில் தோன்றிய தரிசனங்கள், அநேக நாட்களுக்கு என்னை கலங்கபண்ணினது என்று கூறினான், அது சரிதானே? இயேசுவானவர், ஒருமுறை, ஒரு ஸ்திரீயானவள், போதுமான விசுவாசத்தை உடையவளாய், அவரிடத்திலிருந்து சுகத்தை வெளியே இழுத்தபோது, அவர் சுற்று முற்றும் அவளை தேடிப்பார்த்து என்னிடத்திலிருந்து வல்லமை வெளியேறினதை நான் உணர்கிறேன், என்று சொன்னார். அப்பொழுது, ஜனங்கள் அவரை சூழ்ந்து இருந்தார்கள். கிறிஸ்தவர்களே, அது, நான் அல்ல, இல்லை, நான் ஒரு சாதாரண மனிதன், பிரதான பாவி, ஆனால், முழு சுவிசேஷ ஜனங்களாகிய உங்களுக்கு, நான் ஒரு அகால பிறவி, அது உண்மை . கிருபையினால், தேவனுடைய கிருபையினால், உங்களை சகோதர சகோதரிகள் என்று அழைக்கும்படியாய், அவர் அனுமதித்தார். நான் உங்களை நேசிக்கிறேன். - மற்றவர்கள் என்னை காணும்படியா கவும், நான் பேசுவதை கேட்கும்படியாகவும், இன்றிரவு, நான், இங்கே வரவில்லை. பணத்திற்காக, நான் இங்கே வரவில்லை, உங்களுக்கே அது தெரியும். எனவே நான், ஒரு காரியத்திற்காகவே இங்கே இருக்கிறேன். காரணமென்னவென்றால், நான் இயேசுவை நேசிக்கிறேன், உங்களையும் நேசிக்கிறேன். இந்த அழைப்பின் காரணமாக, நான் இங்கே வந்து, ஒருக்கால்,என்னைத் தானே அவருக்கு ஒப்புக்கொடுத்து, என் மூலமாக, அவர், எதாவது காரியத்தை உங்களுக்கு செய்து, நீங்கள் அவரை, அதிகமாக நேசிக்கவும், விசுவாசிக்கவும் செய்து, நீங்கள் சுகமாகத்தக்கதாகவும், நான் இங்கு இருக்கிறேன், என்று நம்புகிறேன். அதுவே, நான் இங்கே இருக்கின்றதற்கான, இன்னொரு காரணமாய் இருக்கிறது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 20போதகர்களே, மீண்டுமாக தேவன் உங்களையும், வியாபார புருஷர்களையும், ஆசீர்வதிப்பாராக. நான் மிகவும் பெலவீனமாவதற்கு முன்னதாக, இப்பொழுது உங்களிடத்தில் இதை கூறுகிறேன், சிலநேரங்களில், என்னால் , மேடையை விட்டேபோக முடியாதபடி ஆகிவிடுகிறது. என்னுடைய மகனும், மேலாளர் மற்றவர்களும், அதை கவனித்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு, மீண்டும் என் நல்விடையை கூற விரும்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மகத்தான ஆற்றின் இக்கரையிலே, மீண்டும் உங்களை, என்னால் சந்திக்க முடியாமல் போனால், நான் அங்கே, அந்த காலையில், உங்களை சந்திப்பேன். இப்பொழுது எனக்குண்டாயிருக் கின்ற சாட்சியை, அங்கே நான் உடையவனா யிருப்பேன், நான் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறேன். 21தேவன் எனக்கு, தரிசனங்களை கொடுக்கிறார்; அது உண்மைதான். வேதம் எனக்கு முன்னால் இருக்க, என்னுடைய சாட்சியாயிருக்கிற தேவன், அதை அறிவார். அவருடைய கிருபையினால், அவர் என்னை அனுமதிக்கும் அளவிற்கு மட்டுமே என்னால் அறிவிக்க முடியும். எனவே, எனக்காக ஜெபியுங்கள். இன்னும் ஒரு காரியத்தை நான் கேட்க விரும்புகிறேன். நான் ஆப்பிரிக்கா, இந்தியா, பாலஸ்தீனா, ஜெர்மானிய தேசங்களுக்கு போகிறேன். நினைவில் கொள்ளுங்கள், அந்த தேசங்களிலே இதற்கு முன் நடந்ததுபோல், மந்திரக்காரர்களும், எல்லாவித வித்தியாசமான ஆவிகளையு டைய ஜனங்கள், அவ்விடத்திலிருந்து, உங்களுக்கு சவால் விடமாட்டார்கள் என்று. நினையாதேயுங்கள், எனவே, என்ன பேசுகிறோம் என்பதை அறிந்தவர்களாய், இருக்கவேண்டும். அது சரியே, வெப்பமாகவும், பலமாகவும் காற்றுகள் வீசிக்கொண்டு, உபத்திரமானது நடந்து கொண்டிருக்கும்போது, வாஷிங்டன், டி.சியில், யாரோ ஒருவர், எனக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார் என்று, நான் நினைவு கூற முடியுமா? நீங்கள் அதை எனக்கு வாக்களிப்பீர்களா? அப்படி செய்வீர்களானால், கரங்களை உயர்த்துங் கள். நன்றி . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப் பாராக. உங்களுக்கு மிக்க நன்றி. 22இப்பொழுது, எண்ணோ, அல்லது (Y) என்ற எழுத்தோ , இருக்கும் என்று நான் நம்புகிறேன். நேற்றிரவு, அவர்கள் 100 ஜெப அட்டைகளை கொடுத்தார்கள் என்று நான் நினைக்கிறேன், அந்த அட்டைகளில், ஒய் (Y) என்ற எழுத்திட்டிருக்கும். நான் நம்புகிறேன், மேலும், அதில் பதினைந்து வரைக்கும் கூப்பிட்டு விட்டேன், என்று நான் நம்புகிறேன், அப்படித்தானே சகோதரர்களே? அதில் முதல் பதினைந்து அட்டைகள் ஏற்கனவே கொடுக்கப்பட்டாயிற்று. அதில் இன்னும் சிலவற்றை, இப்பொழுது, நாம் கூப்பிடுவோம். ஒருக்கால், இன்றிரவு, விசுவாசம் உயர்ந்து வருமானால், ஒருவேளை நாம் இரண்டு அல்லது மூன்று குழுக்களை பெறலாம். அப்படியில்லையென்றால், இங்கிருக்கிற ஒவ்வொருவரையும், நான் ஒன்று கேட்கிறேன் .... இங்கிருக்கிறவர்களில், எத்தனை பேர்களிடத்தில், ஜெப அட்டைகள் இல்லை, ஆனால், இன்றிரவே தேவனால் சுகப்படுத்தப்பட வேண்டுமென்று விரும்பி ஜெப அட்டை இல்லாதவர்கள் எத்தனை பேர்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், எவ்வளவு என்று சொல்ல முடியாது, எங்கு பார்த்தாலும் கரங்களாகவே இருக்கிறது. நான் உங்களிடத்தில் சில காரியங்களை கேட்க போகிறேன். இதுதான் நான் முதன் முறையாக உங்களை சந்திக்கிறதாக இருக்கலாம். கூட்டங்களில் நாம் இன்னும் கூடுதலான நேரம், தங்கியிருக்க முடியாமல் போகிறது என்பது வருத்தத்திற்குரியது தான், தெய்வீக சுகத்தை எப்படி ஏற்றுக்கொள்வது என்பது உங்களுக்கு தெரியும்.... தெய்வீகம்... 23அநேக நேரங்களில் ஜனங்கள் சுகமடையும்போது... ஒரு சரீரத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் வளர்ச்சி என்பது ஒரு பிசாசாயிருக்கிறது. ஒவ்வொரு வியாதியும் பிசாசினால் உண்டாகிறது. தேவன் அவருடைய பிள்ளைகள் மேல் வியாதியை போடமாட்டார். பிசாசு தான் அதை செய்கின்றான் புரிகின்றதா? சாத்தான் சாத்தானை துரத்துமானால்?, நீங்கள் சொல்லலாம், ஏன் பிசாசுகூட சுகமளிக்கிறான் என்று, நல்லது. இயேசு சொன்னார், பிசாசினால் அதை செய்ய முடியாது. அவர், சாத்தான் சாத்தானை துரத்துவானானால், அவனுடைய ராஜ்யம் பிரிந்திருக்குமென்று சொன்னார். எனவே அவனால் முடியாது. தேவனால் மட்டுமே சுகபடுத்த முடியும். மருந்து, மற்றும் மருத்துவர்களும், சுகப்படுத்துவதாக, உரிமை கோருவதில்லை. மேயோ சகோதரர்கள், மருத்துவத்துறையில் பெயரெடுத்தவர்கள். அவர்கள், ''நாங்கள் சுகப்படுத்துவதில்லை, இயற்கைக்கு தான் நாங்கள் உதவி செய்கின்றோம் ஒரே ஒரு சுகமளிப்பவர்தான் இருக்கிறார், அவர் தேவன், என்று சொல்லுகிறார்கள். அவர்களால், உன்னுடைய கரத்தில், ஒரு இடத்தில் தையலைத்தான் போட முடியும், ஆனால், அவர்களால், அதை சுகப்படுத்த முடியாது. அவர்கள் தையல் மட்டுமே போடமுடியும். ஒரு பல் வைத்தியனால் ஒரு பல்லை பிடுங்கத்தான் முடியும், ஆனால், அந்த இடத்தை, யார் சுகப்படுத்த கூடும்? ஒரு வைத்தியரால் ஒட்டுகுடலை, வெட்டி வெளியே எடுக்கத்தான் முடியும், ஆனால், அவர் வெட்டின அந்த இடத்தை, யாரால் சுகப்படுத்த முடியும்? தேவன் அதை செய்கிறார். மருந்து தசைகளை வளர்ப்பதில்லை, மருந்து உதவி மாத்திரமே செய்கிறது. தேவன் சுகப்படுத்துகிறவரா யிருக்கிறார். வைத்தியர் உன் கரத்தின் எலும்பை, நன்றாக பொருத்திகட்டு போடலாம், ஆனால், அவர் வந்து, சரியாய் வைத்து, கட்டு கட்டியவுடன், நீ சுகமடைந்தவனாய் வெளியே போகிறதில்லை. நீங்கள் சுகவீனமாகதான் இருக்கிறீர்கள். வைத்தியர் அவருடைய பாகத்தை செய்கிறார், என்ன செய்ய வேண்டுமென்று, அவருக்கு கற்பிக்கப்பட்டதோ அந்த அறிவிலே, அதை செய்கிறார். உன் கரத்தை பொருத்தி, நன்றாய் கட்டுக்கட்டுகிறார், ஆனால், அது சுகமாக்கப்படும்படி, தேவனிடத்தில் விடுகிறார். அது உண்மை. எல்லா சுகமளித்தலும், தேவனுடையதாயிருக் கிறது. எனவே இப்பொழுது, அவரை அப்படியே விசுவாசியுங்கள். 24சில நேரங்களில், அவ்விதமான வளர்ச்சியிலிருந்து, பிசாசாகிய ஜீவன் வெளியேறிபோகும். அப்பொழுது அந்த வளர்ச்சி மரித்து போகிறது. உங்களுக்குள்ளிருக்கும் ஜீவன் வெளியே போகுமானால், நீங்கள் மரித்துபோவீர்கள். உங்களுடைய ஜீவன் உங்களிலிருந்து வெளியே போகும், ஆனால், சரீரமோ, அங்கேத்தான் இருக்கும்; அது சுருங்குகின்றது. சவ அடக்ககாரர்கள் யாராவது இங்கிருந்தால், எந்த சரீரமும் ஜீவன் போனபிறகு சுருங்கிபோகும் என்று அறிவர். ஒரு சிறுபிராணியை கவனியுங்கள், அது வீதியிலே கொல்லப்படும்பொழுது, அதன் எடை கூடுதலாகும். இங்கிருக்கும் வேட்டையாடுபவர்கள், அல்லது கசாப்பு கடைக்காரர்கள் பிராணியை கொல்லுபவர் களாக இருப்பார்களாயின், நீங்கள் அந்த பிராணியை கொன்றவுடனே, எடையில் வையுங்கள், பின்னர் காலையில் எழுந்து அதை மீண்டுமாய் எடைபோடுங்கள். அது சில பவுண்ட் எடை குறைந்திருக்கும். பின்னர் அப்படியே, இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மீண்டும் வைத்திருந்தால், அதன் பிறகு, அதன் எடை இன்னும் எத்தனை பவுண்டுகள் கூடுதலாகும், என்று கவனியுங்கள். 25சரி, இப்பொழுது, ஒரு பகுதியில் காணப்படும் வளர்ச்சி, அது மரிக்கும்போது, அந்த வளர்ச்சியிலிருந்து, பிசாசு வெளியேறுகிறான். அதாவது பெரிய கட்டி, புற்றுநோய் அல்லது கண்புரை , அவ்விதமானவைகளிலிருந்து, அதிலிருக்கிற ஜீவனாகிய பிசாசு வெளியேறும் போது .... 'இங்கிருக்கின்ற அனைவரும், சிறு கிருமியிலிருந்து வந்தவர்களாயிருக் கிறோம், நீங்கள், தன்னில் தானே வளர்கின்ற செல்களாக துவங்குகிறீர்கள். அந்த செல்களெல்லாம், அதற்குள் இருக்கும் ஜீவனின் சுபாவத்தை உடையதாயிருக்கும், அதைக்கொண்டுதான் மனிதன் ஆக்கப்பட்டிருக்கிறான். நாய்களிலிருந்து வரும் செல்கள், ஒரு நாயை உண்டுபண்ணும், ஒரு பறவையின் செல்கள் பறவையை உண்டுபண்ணும். ஒவ்வொன்றும் அதன் சுபாவத்தையும், இனத்தையும் பிறப்பிக்கும். ஆனால், இப்பொழுது ஒரு தசை வளர்ச்சி, ஒரு பிசாசாக இல்லையென்றால், அது வளர்ச்சியில் வளர்ந்து வந்திருக்க முடியாது. அது அதன் செல்களை பெருக்க துவங்குகின்றது. உதாரணமாக, புற்றுநோயை எடுத்துக்கொள்ளுங்கள், அது தன் செல்களை, பெருக்கிக்கொண்டே போய் பெரிதாகி, பெரிதாகின்றது. சரி, இப்பொழுது, அதற்கு ஜீவன் இருக்கின்றது, அது ஒரு ஜீவிக்கின்றதாயிருக்கிறது, நீங்களும் உங்கள் தாயின் கர்ப்பத்தில் ஜீவித்து; பெருகிக்கொண்டே இருந்தது போலவே, அதே விதமாகத்தான் நீங்கள் பெருகிக் கொண்டே போகிறீர்கள். உங்களில் இருக்கிற அந்த ஜீவன், அது வித்தியாசமான ஜீவனாய் இருக்கிறது. நீங்கள் ஜீவனை பெற்றிருப்பதால் ஜீவிக்கிறீர்கள். அது ஒரு மரணத்தின் ஜீவனாயிருக்கிறது. அல்லது ஒரு மரணத்தின் ஆவியாயிருக்கிறது எனலாம். மன்னிக்கவும். அது மரணமாயிருக் கிறது. சரி, இப்பொழுது, அது உனக்குள்ளிருந்த ஒன்றல்ல, அதற்கு முன்னர், அது அங்கே இல்லை, ஆனால் இப்பொழுது அது அங்கே இருக்கிறது. 26நல்லது, அப்படியானால், அதை, அங்கே வைத்தது யார்? அது ஒரு காரியத்திலிருந்து தான் வரவேண்டியதாய் இருக்கிறது. அந்த ஒருகாரியம், பிசாசுதான். மேலும், அது, ஒரு கிருமியாய் இருக்கிறது; புற்றுநோய், சதை வளர்ச்சி, இவைகளில் எதுவாய் இருந்தாலும், அது ஒரு கிருமியிலிருந்து தான் வரவேண்டும். நீங்களும் கூட, ஒரு கிருமியிலிருந்து தான் வருகிறீர்கள், பாருங்கள், ஆகவே, அது மரிக்கும்போது... உதாரணமாக, கண்புரை நோய் போன்று, அதாவது, ஒரு நபர் கண்புரை நோயை உடையவராயிருந்து, அந்த ஆவி அவரை விட்டு கடந்து போகும்போது, மக்கள், ஓ என்னால் பார்க்க முடிகிறது, பார்க்க முடிகிறது என்பார்கள். அடுத்த நாள், அதைக் காட்டிலும் சிறப்பாக பார்க்கமுடியும். ஆனால், அதற்கு பின்னர், ஏறக்குறைய 72 மணி நேரங்களுக்கு பின்னால், அதற்குள் அழிவு துவங்குகிறது. இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் போன்று. இப்பொழுது, செல் அழிவதில்லை. நிச்சயமாகவே, அவர் மூன்று பகல் இரவுகளுக்கு, முன்னதாக எழும்பினார். பாருங்கள், அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் மரித்து, ஞாயிறு காலையில் எழும்பினார், ஏனென்றால், தாவீது, நான், அவருடைய ஆத்துமாவை பாதாளத்தில் விடேன் என்றும், என் பரிசுத்தவானின் அழிவை, காணவொட்டேன் என்றும் கூறியிருக் கிறான். அந்த செல்கள் 72 மணி நேரத்திற்கு பிறகு உடைய துவங்கும். பிறகு அந்த நோயாளிக்கு, அந்த வளர்ச்சி வீங்க ஆரம்பித்து பெரிதாகும். ஏனெனில், உங்கள் இருதயமானது, இரத்த ஓட்டத்தை சுத்திகரிக்க வேண்டியதாயிருக் கிறது. 27நேற்றிரவு, பார்பதற்கு, தேவபக்தியும், பரிசுத்தமும், நிறைந்த ஒரு ஸ்திரீ, பெரிய புற்றுநோய் கட்டியுடன், என்னிடம் வந்தாள். அவள் தான் ஜெபவரிசையில் வந்தேன் என்றும், அந்த புற்றுநோய் கட்டி தலை முழுவதும் மூடியிருந்ததென்றும், சொன்னாள். மேலும், நான், ஆவியானவரின் கீழாக நின்று, அவளை நோக்கி பார்த்து, அவள் தலையில் புற்றுநோய் கட்டி இருக்கிறது என்றும், அது வெளியே விழப்போகிறது என்றும் நான் சொன்னதாக அவள் சொன்னாள். அப்படியே அது, வெளியே வந்து விழுந்தது. அவள், அதை இங்கே கொண்டு வந்திருக்கிறாள்... இன்றிரவு ஒரு திராவக கண்ணாடி குப்பியில் அதை போட்டு, இங்கே கொண்டு வந்திருக்கி றாள், என்று நான் யூகிக்கிறேன். அவ்வித மானவைகளை, ஆயிரக்கணக்கில் நாம் கொண்டிருக்கிறோம். அந்த ஸ்திரீ இந்த கட்டிடத்தில் இருக்கிறாளா? நீங்கள் எழுந்து நிற்க முடியுமா? திராவக கண்ணாடிகுப்பியில், அந்த புற்றுநோய் கட்டியை போட்டு கொண்டு வந்த அந்த ஸ்திரீ, இந்த கட்டிடத்தில் எங்காவது இருந்தால்...எழுந்து நிற்பது அவள்தானா? மற்றவர்கள் பார்க்கும்படி, உன்னுடைய கரத்தை அல்லது, ஏதாவது ஒன்றை அசைத்துகாட்டு. ஆம், கண்ணாடி குப்பியில் புற்றுநோய் கட்டியுடன், அந்த ஸ்திரீ அங்கே நிற்கிறாள். அது அப்படியே வெள்ளையாக மாறி, இந்த மேடையில் விழுந்ததை நான் பார்த்திருக்கிறேன். 28இப்பொழுது, அது ஒரு அற்புதமாயிருக் கிறது. வழக்கமாக, தசை வளர்ச்சி மரிக்கும்போது, அதிலிருந்து, ஜீவன் வெளியேறிவிடுகிறது. ஆனால் அந்த வளர்ச்சி, அது வெளியே விழ முடியாத பட்சத்தில், அது உள்ளுக்குள்ளாகவே இருக்கிறது. அது உள்ளாகவே இருக்கும்போது, நிச்சயமாகவே, சில நாட்களுக்கு பின், அது வீங்க துவங்கும், வேறெந்த மாம்சத்தைப் போலவே, அந்த செல்கள் உடைய துவங்கும். பிறகு நீங்கள் ஜூரம் கொண்டு உண்மையாகவே வியாதிபடுவீர்கள். ஏனென்றால், அது, ஒரு கிருமிகளின் பாதிப்பாய் இருக்கிறது. இருதயமானது, இரத்தத்தை உந்தி தள்ளி, சரீரத்தை சுத்திகரிக்கின்றது. அங்கே, ஒரு பெரிய தசை வளர்ச்சி, உங்கள் சரீரத்தில் இருக்கிறது. அந்த நோயாளி, மிகவும் பயங்கரமாக வியாதிப்படுகிறான். அப்பொழுது, நீங்கள் ஓ, நான் மேடையில் நின்றபோது அவ்வளவு நன்றாக உணர்ந் தேன், ஓரிரண்டு நாட்களுக்கு நன்றாக உணர்ந்தேன். ஆனால் என்னுடைய சுகமளித்தலை, நான் இழந்துவிட்டேன், என்று யூகிக்கிறேன் என்பீர்கள். 29ஏன்? சகோதரனே, சகோதரியே, நீங்கள் சுகத்தை பெற்றுவிட்டீர்கள், என்பதற்கு உலகத்திலேயே அதுதான், மிக சிறந்த அடையாளமாயிருக்கிறது, புரிகின்றதா? அதற்கு பிறகு, நீங்கள் அவிசுவாசிக்க துவங்குகிறீர்கள், உங்கள் விசுவாசமானது, எந்த அளவிற்கு, நிச்சயமாக, அந்த ஜீவனை வெளியேற்றினதோ, அந்த அளவிற்கு, உங்களுடைய அவிசுவாசமானது, அதை மீண்டுமாக, உள்ளே கொண்டுவந்துவிடும். புரிகின்றதா? நிச்சயமாக, அப்படியே கொண்டுவரும். அது அதனை உயிர்பிக்கும். நினைவிருக்கட்டும், அசுத்த ஆவி ஒரு மனிதனை விட்டு வெளியேறின பிறகு, அது வறண்ட இடங்களில் அலைந்து தேடி, அதன் பிறகு, வேறு ஏழு ஆவிகளுடன் திரும்ப வருவான் என்று, இயேசு சொன்னார். அது சரிதானே? விசுவாசம் ஒரு வீட்டின் நல்ல மனிதன். அது அங்கே இருக்கட்டும்? விசுவாசம்). நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பது காரியம் அல்ல... அது நீங்கள் உணர்வதல்ல, நீங்கள் என்ன விசுவாசிக்கிறீர்கள் என்பதே! நீங்கள் அதை உணர்கிறீர்களா என்று இயேசு ஒருபோதும் கேட்கவில்லை, நீ அதை விசுவாசிக்கிறாயா...? என்றுதான் அவர் கேட்டார். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. சரி. 30இப்பொழுது, நாம் பார்ப்போம், நேற்றிரவு Y எழுதப்பட்ட நூறு ஜெப அட்டைகள் வினியோகிக்கப்பட்டன. நாம் அந்த 100 பேரையும் கூப்பிடவில்லை . அவைகளில் கடைசி 15 அட்டைகளை, இன்றிரவு எடுத்துக்கொண்டு முயற்சிப் போம். 80வது எண்ணுள்ள அட்டை யாரிடம் இருக்கிறது? ஓ, அதாவது 85வது ஜெப அட்டை யாரிடம் இருக்கிறது. இங்கே யாராவது வைத்திருந்தால் கரத்தை உயர்த்துங்கள்? அங்கே பின்னாலே யாரிடமாவது இருக்கின்றதா? ஜெப அட்டை 85? 31சரி, 86, ஜெப அட்டை 86 யாரிடம் இருக்கின்றது? சரி, 87, 87? யாரிடமாவது ஜெப அட்டை 87 உடையவரை நான் காணமுடியுமா? தயவுசெய்து எழுந்து நிற்பீர்களா? சரி, 87 என்ன? பாருங்கள் 87 யாராவது எழுந்திருக்க கூடாமல் இருக்கலாம்; ஒருவேளை அவர்கள் படுக்கையாய் இருக்கலாம்; ஒருக்கால் அவர்கள் செவிடாய் இருக்கலாம். அவர்கள் ஒருக்கால் எனக்கு யாருமே உதவி செய்யவில்லையே என்று சொல்லலாம். அதனுடைய நிலவரத்தை, என் அலுவலகத்தில் தெரிந்து கொள்வேன். அவர்கள் சொல்வார்கள் “நான் அங்கே தான் இருந்தேன். நீங்கள் இன்னார் இன்னார் என்று கூறினீர்கள், யாருமே எனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்லுவார்கள். ஒருவேளை அவர்கள் செவிடாய் இருக்கலாம். இப்பொழுது, பாருங்கள், நம்மிடம் 85, 86, 87 இருக்கின்றது. உன் பக்கத்தில் உள்ளவரின் அட்டையை பாருங்கள். அவர் ஒருக்கால் செவிடாய் இருந்து, கேட்க முடியாமல் இருக்கலாம். 87? சகோதரியே உமக்கு நன்றி. 88 யாரிடம் இருக்கிறது? ஜெப அட்டை 88. இந்த கட்டிடத்திற்குள் இருக்கிறதா? 88? சரி. 89? ஜெப அட்டை எண் 89? உங்களால் எழுந்திருக்க முடியுமா? 89? 89க்கு கரம் உயர்த்தப்பட்டதா? சரி. 89. சரி 90? 90 இருக்கின்றதா? (நம்பிடுவாய் பாடப்படு கிறது) இப்பொழுது, இங்கிருக்கின்ற ஒவ்வொருவருடனும்... அவர் என்ன செய்ய சொல்கின்றாரோ, அதை நீங்கள் இப்போது செய்யுங்கள். அவர் என்ன செய்ய சொன்னாலும் சரி அதை செய்யுங்கள். அதை அப்படியே செய்யுங்கள். அவர் என்ன செய்ய சொல்கிறாரோ நீங்கள் போய் அப்படியே செய்யுங்கள். 32இப்பொழுது, நான் உங்கள் சகோதரன் ஒரு சாதாரண மனிதன். அவர், ஒருவேளை வந்து, இந்த ஏழையின் சரீரத்தை எடுத்து, அதை போதுமான அளவிற்கு ஆசீர்வதித்து, ஆவியானவர் அதினூடாக கிரியை செய்யும்படி அனுமதிப்பாரானால், அப்பொழுது இயேசு கிறிஸ்து ஜனங்கள் மத்தியில் அசைவதை நீங்கள் காண்பீர்கள்., அவர் எவ்வளவு தான் தம்மை இங்கே ரூபகாரப்படுத்தினாலும் சரி, அது பரவாயில்லை , நீங்கள் மாத்திரம், அவரை விசுவாசிக்கவில்லையென்றால், உங்களுக் காக அவர் ஒன்றையும் செய்ய முடியாது. அது சரிதானே? அவர் இங்கே, இப்பொழுது, என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தாலும் சரி, உங்களால், பார்க்க முடிகின்ற அளவிற்கு, அவர் இருந்தாலும் சரி, நீங்கள் என்னை நம்பவில்லையென்றால், என்னால் உங்களுக்கு ஒன்றையும் செய்ய முடியாது. என்னுடைய வார்த்தைகள், அவர் வேதத்தில் கூறின, அதே வார்த்தைகளாகத்தான் இருக்கும். தேவன் உங்களுக்கு உதவி செய்யவேண்டுமென்று, நான் என் முழு இருதயத்தோடும் ஜெபம் செய்வேன். ஏனென்றால், ஒருவேளை,அவர்கள் வியாதியாயுள்ள, பாதிக்கப்பட்ட, தேவை உடைய தாய்மார்களாய், தகப்பன்மார்களாய், மற்றும் அவ்விதமானவர்களாய் இருக்கலாம். எனக்கு தெரிந்தவரை, மேலான விதத்தில் நான் தேவனிடத்தில் உங்களுக்கு உதவி செய்யும்படி கேட்டுகொள்வேன். 33'சரி, இங்கே வந்து வரிசையில் நில்லுங்கள். நாம் யாவருமாய் சேர்ந்து, சிறிது நேரம் தலைகளை தாழ்த்துவோம். இரக்கமுள்ள பிதாவே, நாங்கள் உம்முடைய குமாரனாகிய, இயேசுவின் நாமத்தினால், பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து, இயேசு கிறிஸ்துவின் கிரியைகளை வெளிப்படுத்தி காட்டும்படி, நாங்கள் ஜெபிக்கிறோம். எங்குமுள்ள இந்த ஜனங்களை ஆசீர்வதித்து, அவர்களை முழுமையாக சுகப்படுத்தி, அவர்களை சுகதேகமுடையவர்களாகவும், சந்தோஷ முடையவர்களாகவும் ஆக்கும். இப்பொழுதும் பிதாவே, உம்முடைய ஊழியக்காரனின் பெலவீனத்தை நீர் அறிவீர். என்ன சொல்வது, அல்லது என்ன செய்வதென்றோ, எனக்கு தெரியவில்லை. இப்பொழுது நான் இவையாவற்றையும் உம்முடைய கட்டளையின்படியே செய்தேன் நீர் இன்றிரவு, இங்கே இருந்து, இந்த ஜனங்களை ஆசீர்வதித்து, உதவி செய்வீர், என்று நான் நம்புகிறேன். பிதாவே, நீர் மட்டும், பரிசுத்த ஆவியானவரை, உம்முடைய ஊழியக்காரனின்மேல் வரும்படியாய் அனுமதித்து, இந்த காரியங்கள் யாவற்றையும் எங்களுக்கு வெளிப்படுத்தி, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்றும், எந்தவிதமாய் செய்ய வேண்டுமென்றும் கூறுவீரானால், அப்பொழுது, நாங்கள் எல்லோரும் சந்தோஷமாய் களிகூறுவோம். இந்த ஜனக்கூட்டத்தார், ஒருமனதோடும், ஏக சிந்தையோடும் உம்மேல் விசுவாசமாய் இருப்பார்கள். பிதாவே, உம்முடைய ஊழியக்காரன் என்ற முறையில், நான் இதை கேட்கிறேன்; இன்றிரவு, இக்கட்டிடத்தைவிட்டு ஒரு மனிதனும் பெலவீனனாய், கடந்துபோக வேண்டாம். அவர்கள் ஒவ்வொருவரும் சுகமடைந்தவர்களாய், சுகதேகமுடைய வர்களாய் களிகூர்ந்து போவார்களாக. இதை செய்யும். அப்படி செய்வீரா? பிதாவே, என்னுடைய இருதயத்தில் கிருபையுடனும், விசுவாசத்து டனும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென். 34இப்பொழுது, அநேக நேரங்களில்... நல்லது, இந்த விளக்குகளை கண்காணிக்கிறவர்கள் யாராது இருக்கிறார்களா? அவைகளை நகர்த்தக் கூடியவர் யாராவது ஒருவர் அங்கே இருக்கிறாரா?) இப்பொழுது சில நேரங்களில், பரிசுத்த ஆவியானவர் வரும்போது ... உங்களில் அநேகர் அந்த படத்தைப்பார்த்திருக்கிறீர்கள். நான் மீண்டும் எப்பொழுதாவது இங்கு வரும்போது, அவைகளில் சிலவற்றை உங்களுக்குக் கொண்டு வருகிறேன், இன்றிரவு, சகோதரன் மூர் சொன்னபடியாக, அநேக நேரங்களில் அது, புகைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. புத்தகங்களில் இருக்கிற அந்த புகைப் படத்தை, நீங்கள் யாவரும் பெற்றிருக்கி றீர்கள், என்று நான் நினைக்கிறேன். இரண்டு புகைப்பட பெட்டிகளை மாத்திரமே, நான் கொண்டிருந்தேன். ஆகவே, நீங்கள், அவைகளில் உண்மையாகவே களிகூர்ந்தீர் கள் என்று நம்புகிறேன். 35இப்பொழுது, நீங்கள், அதை உற்று நோக்கும்போது, அதற்குள் மறைந்திருக்கிற இன்னொரு படத்தை பார்க்கலாம். அதை, பத்திரிகை புகைப்பட கலைஞர் ஒருவர், அர்க்கான்சாசில் உள்ள கேம்டனில், படம் பிடித்தார். ஆனால், முதலில் அது, அமெரிக்க சங்கத்தினால் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ படமாக இல்லை. அவர்கள், அதை எடுத்து வைத்திருந்தார்கள். பிறகு அது, அதிகார பூர்வமாக்கப்பட்டது. ஆகவே, அநேக ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில்... சில காலத்திற்கு முன்பாக, ஒரு எழுப்புதலுக்கு பிறகு, நான் அங்கே ஆற்றில் நின்றுக்கொண்டு, சுமார் ஐநூறு பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்துகொண்டிருந்தேன். அப்பொழுது, சரியாக, நான் நின்று கொண்டிருந்த அந்த இடத்திற்கு நேராக, அந்த வெளிச்சம் வந்தது. ஜனங்கள் மயங்கி விழுந்தார்கள். ஆனால், அது அப்படியே அங்கே இருந்தது. மேலும், அது கெர்ச்சிக்கிற சத்தமாயும் வீசுகிற அக்கினியாயும் இருந்தது. எனக்கு தேவனிடத்திலிருந்து தயவு கிடைக்கும் பட்சத்தில், இந்த தலை நகரத்தில், இன்றிரவு, இங்கே கூடியுள்ள இந்த ஜனங்களுக்கு முன்பாக, அதே விதமாக, இன்னும் ஒரு விசை தேவன் காட்சியில் வரவேண்டும், என்று ஜெபிக்கிறேன். இப்பொழுது, அது, சிலருடைய கண்களுக்கு காணப்படலாம், சில கண்களுக்கு காணப்படாமல் இருக்கலாம், என்பதை நீங்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அவ்விதமாக, நிகழவேண்டும் என்று நாம் விரும்புவதில்லை, ஆனால்,அது, அவ்விதமாகதான் நிகழ்கிறது. தேவ ஆவியானவர், இயேசுவின் மேல் வந்து, அமர்ந்த காட்சியை யோவான் மட்டுமே பார்த்தவனாய் இருந்தான். அது சரிதானே? கூடி இருந்த ஜனங்கள் கண்டார்கள், என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை. மேலும், ஞானிகள் நட்சத்திரத்தை பின்பற்றினார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அந்த நட்சத்திரம் தேசத்திலுள்ள எல்லாவான ஆராய்ச்சி கூடங்கள் மேலும் தான் கடந்துசென்றது. மேலும், கிழக்கத்திய தேசத்திலிருந்து வாரங்கள், மாதங்களாக, கடந்து வந்து கொண்டேயிருந்தது. அவர்கள், நேரத்தை நட்சத்திரங்களை கொண்டுதான் கணக்கிட்டார்கள். அவர்கள் இரவெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டு நேரத்தை கணக்கிட்டு கொண்டிருந்தார்கள். ஆனால், அதை ஒருவரும் பார்க்கவில்லை. ஆனால், ஞானிகள் மட்டும் அதை கண்டார்கள். ஏனென்றால், அவர்கள் அதை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார்கள். நீங்கள் இன்றிரவு, கிறிஸ்துவை எதிர்நோக்கி கொண்டிருந் தால், நீங்கள், அவரை காண்பீர்கள். கர்த்தராகிய இயேசு தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக, நல்லது. 36பில்லிபால், சகோதரன் மூர், உங்களில் சிலர், எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கி றீர்கள், சரிதானே? அந்த முழு வரிசையும் வரிசைப்படுத்தி விட்டார்களா? பில்லி, அந்த பதினைந்து முழுவதையும்? பதினைந்து பேர் நிறுத்தப்பட்டாயிற்று. இப்பொழுது, மற்றவர்கள், ஜெப அட்டை இல்லாதவர்க ளாய், வரிசையில் வரமாட்டோம், என்பதை அறிந்திருக்கிற நீங்கள், இந்த பக்கமாய் திரும்பி, விசுவாசிக்கமட்டும் செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன். அவருடைய வஸ்திரத்தின் தொங்கலை தொட்ட, அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த விசுவாசத்தோடு நீங்கள் விசுவாசியுங்கள். அவர் அப்படியே திரும்பி, “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது” என்று சொன்னார். 37அவர், நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக் கிறீர்களா, இந்த கட்டிடத்தின் நீளம், அகலம் கொண்ட, மதில்களையுடைய இருமடங்கு எரிகோவின் மதிலண்டையில் உட்கார்ந்துகொண்டு, அங்கே, ஊளையிட்டு கத்தி கொண்டிருந்த அந்த ஜனங்களின் மத்தியில், 'என்மேல் இரக்கமாயிரும்' என்று அந்த குருடன் கதறினான். இயேசு ஒருக்கால், அவன் கத்தினதை கேட்டிருக்க முடியாது. ஆனால், அவனுடைய விசுவாசத்தை அவர் உணர்ந்தார், அது கிரியை செய்தது. அந்த கூட்டகுறை கூறுபவர்கள் மத்தியில், அது கிரியை செய்தது. அவர் திரும்பி, 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்று சொன்னார். அவர், ஜனங்கள் பக்கமாய் திரும்பி, உங்கள் இருதயங்களில் சந்தேகிக்கிற தென்ன? என்றார். அவர், கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயிடம் போய், உன் புருஷனை அழைத்துக்கொண்டுவா என்றும், பிதா எனக்கு காண்பிக்கிறதை தவிர நானாக ஒன்றையும் செய்ய முடியாது என்றும், கூறினார். நான், உங்களை ஒன்று கேட்கிறேன். நான் சொன்னவைகள் சத்தியமாயிருக்கும் பட்சத்தில், அது சத்தியமாயிருந்தால், தேவன், தம்முடைய வார்த்தைக்கு கடமைப்பட்டிருக்கிறார். எனக்கல்ல, அவருடைய வார்த்தைக்கு அவர் கடமைப்பட்டவராயிருக்கிறார். அது சரிதானே? அவருடைய வார்த்தைக்கு அவர் கடமைப்பட்டிருக்கிறார். அப்படியானால், அவர், செய்வேன் என்று கூறியுள்ள விதமாகவே, அவர் அதை நிறைவேறப் பண்ணுவார். அப்படி அவர், செய்வாரானால், இங்கே இருக்கின்ற நீங்கள் யாவரும் கர்த்தராகிய இயேசுவை ஏற்றுக்கொள்ளா தவர்களாயிருப்பீர்களானால், இப்பொழுது, அவரை ஏற்றுக்கொள்ள விருப்பமுடைய வர்களாயிருக்கிறீர்களா? மற்றவர்களுக்கு, அவருடைய கிருபை அருளப்படுவதை பார்க்கிற உங்களையும், அது சுகப்படுத்தும். உங்களுக்கு விசுவாசமும், நம்பிக்கையும் இருக்குமா னால், உங்களுக்கும், அந்த கிருபை அருளப்படும். கர்த்தாவே, நான் ஒரு விசுவாசி, இன்றிரவு, நீர் என்னை சுகமாக்க வேண்டும் என்று விரும்புகிறேன், என்று மட்டும் ஜெபித்து, அவரிடம் சொல்லுங்கள், தேவன் அதை, உங்களுக்கு செய்வார். 38நாங்கள், சமீபத்தில்தான் ஆப்பிரிக்காவி லிருந்து வந்தோம். இன்னும், சில வாரங்களில் நாங்கள் மீண்டும், அங்கு திரும்பிபோக வேண்டும்: ஆப்பிரிக்கா, இந்தியா, பாலஸ்தீனா, ஜெர்மனி இவைகளில், ஒரு ஊழியம் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில்டர்பனில், 3 அல்லது 4 பேர்கள் ஜெபவரிசையில் கடந்து சென்றதும், பரிசுத்த ஆவியின் வல்லமை ஜனங்கள் மேல் அசைவாடுவதையும், தேவன் என்ன செய்கிறார். என்பதையும் கண்டு, ஒரே பீட அழைப்பில் ஆல்ட்டர் கால்) 30,000 பேர்கள், இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டார்கள். ஒரே நேரத்தில் முப்பதாயிரம் பேர்கள். ஆகவே, நாம், தேவனுடைய வார்த்தையை ஒரு நியமன சட்டமாக எடுத்துக்கொண்டு உலகெங்கும் போய் சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டும், என்று நான் விசுவாசிக்கிறேன். சுவிசேஷ மானது. வார்த்தையாய் மட்டும் வராமல், பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், கிரியையோடும் வந்தது. எனவே சுவிசேஷம் என்பது, பரிசுத்த ஆவியின் வல்லமையை செயல்படுத்தி காட்டுகிறதாய் இருக்கிறது. 39நான், தேசங்களுக்குள்ளாய்போயிருக் கிறேன், அவர்கள் கூறுகிறார்கள், எங்களுக்கு மிஷினரிமார்கள் வேண்டாம். உங்களுக்கு தெரிந்ததை காட்டிலும், அதை குறித்து நாங்கள் அதிகமாக அறிந்திருக்கிறோம். எங்களுக்கு தேவையானதெல்லாம், யாராவது ஒருவர் போதுமான விசுவாசத்தோடு, தேவனுடைய வார்த்தையை பிரத்தியட்சபடுத்தி காட்ட வேண்டும். அதைத்தான் அவர்கள், காணவேண்டுமென்று விரும்புகிறார்கள். அந்தவிதமாகத்தான், அவர்கள் மனம் மாறுதல் அடைவார்கள். அந்த விதமாகத்தான், அவர்கள் கிறிஸ்துவை அறிந்திருக்கிறார்கள், ஏனென்றால், அந்த விதமாகத்தான் அவர்கள் விசுவாசிக்கிறார் கள். இன்றிரவு, அநேகர் கிறிஸ்துவை அவர்கள் முழு இருதயத்தோடு அறிந்து கொள்வார்கள் என்று, நான் என் முழு இருதயத்தோடு, தேவனிடத்தில் நம்பிக் கையாய் இருக்கிறேன். நசரேனாகிய கர்த்தராகிய இயேசுதாமே, உங்கள் ஒவ்வொ ருவரையும் ஆசீர்வதிக்க வேண்டுமென்பதே, என்னுடைய ஜெபமாயிருக்கிறது. 40இப்பொழுது, சரியா? எந்த ஒரு மனிதனும், எந்த நேரத்திலும் தேவனை தேடினதே கிடையாது, தேவன் தான் மனிதனை தேடுகிறார். இந்த உலகம் முழுவதிலும், எந்த ஒரு மனிதனும், தேவனை தேடினதே இல்லை, தேவன் மனிதனை தேடிக்கொண்டிருக்கிறார். மனிதன் முதன் முதலாக, ஏதேன் தோட்டத்தில் விழுந்து போனபோது, அது அவனுடைய ஜென்ம சுபாவத்தை காட்டினது. மனிதன் ஒளிந்துகொண்டான்; தேவன் மனிதனை தேடிக்கொண்டிருந்தார். இயேசு, என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், ஒருவனும், என்னிடத்தில்வரான், என்று சொன்னார். முதலாவதாக, பிதாவானவர் அவனை இழுக்கவேண்டியதாயிருக்கிறது. அப்படியானால், நான், உங்களுக்கு ஒரு காரியத்தை விளக்கிக் காட்ட போகிறேன். ஒரு தரிசனம் காண்பதை பற்றி...இங்கிருக் கிறவர்கள், எத்தனை பேர் சொப்பனம் கண்டிருக்கிறீர்கள், உங்கள் கரங்களை நான் காணட்டும், என்னே, மூன்றில் இரண்டு பங்கு நான் யூகிக்கிறேன், அநேகர் கனவு காண்பதில்லை என்பது உண்மையா. அது உங்களுடைய உள்ளுணர்வாக இருக்கிறது . என்று, நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம். இங்கேயிருக்கிறது உங்களுடைய முதலுணர்வு, இங்கேயிருக்கிறது, உங்களுடைய உள்ளுணர்வு. இந்த உள்ளுணர்வை, பரிசுத்த ஆவியானவரோடு தொடர்புபடுத்தி, கிரியை செய்ய முயற்சிக்கிறேன். இந்த முதலுணர்வு ... இங்கிருக்கிற இந்த மனிதனையாகிலும், அல்லது அவர்களில் யாராவது ஒரு மனிதனை, நீங்கள் விசுவாசிக்கிறீரா? என்று கேட்டால் அவர்கள், ஓ, ஆம் ஐயா, என்பார்கள். நீங்கள், இங்கிருந்து விசுவாசிக்கிறீர்கள், ஆனால், கீழே இங்கிருக்கிற அந்த மனிதனை குறித்தென்ன? அவன் தான் நம் கப்பலை இயக்குகிறவன். மேலே கப்பலோட்டியின் அறையில் இருக்கிற மனிதன் அல்ல, அது இயந்திர அறையில் இருக்கிற மனிதனே. 41சில நேரங்களில், நீங்கள் தூங்குகின்ற போது, உங்கள் உள்ளுணர்வுக்குள்ளாகி, சொப்பனம் காண்கிறீர்கள். நீங்கள், இங்கே இருந்தபோது, செய்த காரியங்களை கனவாக காண்கிறீர்கள். பின்னர், நீங்கள் தூங்கி எழுந்ததும், கனவில் கண்ட காரியங்களை, ஞாபகம் கொண்டிருக் கிறீர்கள். சொப்பனங்களை காண்கிற ஜனங்களாகிய நீங்கள், அநேக வருஷங்களுக்கு முன்னர் கண்டவற்றை, இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள். அப்படியானால், உங்களில், ஏதோ ஒரு பகுதி அங்கே இருந்தது, அது சரிதானே? அப்படியில்லையென்றால், எத்தனையோ வருடங்களுக்கு முன்பாக, நீங்கள் கண்ட, சொப்பனத்தை நீங்கள் ஞாபகத்தில், வைத்திருக்க முடியாது. நன்றாக அயர்ந்து நித்திரை செய்கிறமனிதனுக்கு, அவனுடைய உள்ளுணர்வு, எங்கோ தூரத்தில் இருக்கும், அது, அவன் அருகில் வரவே வராது. ஆனால், ஒரு ஞானதிருஷ்டிக்காரனுக்கோ, அவனுடைய உள்ளுணர்வு வேறு எங்கோ பின்னாக இல்லை, எங்கேயும் இல்லை, அதுசரியாக , இங்கேயே இருக்கிறது. அவன் நித்திரைக்குள் போகாமலேயே;அவனுடைய கண்கள் திறந்தவாறு இருக்க, அவன் அப்படியே காட்சியை காண்கிறான். அந்த மனிதன், சொப்பனம் காணாமலேயே நித்திரைக்குள்ளாகத்தக்கதாக, தேவன், அவனுக்கு ஒரு ஸ்தானத்தை கொடுக்கிறார். சொப்பனம் காணும்படியான வழியை, தேவன் மனிதனுக்கு கொடுத்திருக்கிறார். எனக்காக, ஒரு சொப்பனம் காணுங்கள் என்று, நான் சொல்வேனானால், உங்களால் அதை செய்ய முடியாது. 42சரி, அப்படியானால்,தேவன் சபையில் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை தீர்க்கதரிசிகளாகவும், சிலரை சுகமளிக்கும் வரங்களை உடையவர்களாகவும் வைத்திருக்கிறார். அது சரிதானே? அவர்கள் எல்லாரும், சபை பரிபூரணம் அடைவதற்காகவே கொடுக்கப்பட்டிருக் கிறார்கள். பவுல் கூறினார், நீங்கள் எல்லாரும் அந்நிய பாஷையில் பேசிக் கொண்டிருக்க, அங்கே கல்லாதவன் ஒருவன் உள்ளே வருவானாகில், உங்கள் யாவரையும் பைத்தியக்காரர்கள் என்று சொல்லுவான் அல்லவா? ஆனால், ஒருவன் தீர்க்கதரிசனம் உரைத்து, இருதயத்தின் சிந்தனைகளை வெளிப்படுத்தினால், அவர்கள் முகம் குப்புரவிழுந்து, உண்மையாகவே தேவன் உங்களோடு கூட இருக்கிறார் என்று கூறுவார்கள் அல்லவா? அது சரிதானே? அதுதான் சுவிசேஷமா? அது, நேற்றைய இயேசுகிறிஸ்து அல்லவா? அவர் இன்றைக்கும் இல்லையா? அந்நிய பாஷையில் பேசுவதினால், உங்களால் அவரை விசுவாசிக்க முடியும். பரிசுத்த ஆவியினால், உங்களால் அவரை விசுவாசிக்க முடியும். ஆனால், அவர், அதே இயேசு கிறிஸ்துவாய் இருக்கிறார் என்று, நான் அவரை முழு நிச்சயமாய் விசுவாசிக் கிறேன். அவர் மரித்தவர் அல்ல; அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தவர். அவர், இன்றிரவு, இங்கே, இந்த மேடையின் மேல் இப்போது இருக்கிறார். அவர், நம்மை ஆசீர்வதித்து, நமக்கு உதவி செய்வாராக. 43இதற்கு முன்பு, நான் இந்த தேசத்திற்கு வந்ததே கிடையாது. எனக்கு தெரிந்த மட்டும், எனக்கு முன்பாக காண்கின்ற , இவர்கள் மத்தியில், நான் அறிந்துள்ள ஒரு ஜீவ ஆத்துமாகூட இங்கு இல்லை. இந்த மேடையின் மேல்இருக்கிறவர்களில், ஒரு சிலரையே நான் அறிவேன். சகோதரன் போசே, (B0ZE) எனக்கு அவரை நினைவிருக்கிறது, அவருக்கடுத்தாற்போல் உள்ள, மனிதரை நான் பார்த்திருக்கிறேன், அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் இல்லை , சகோதரன் லின்ட்செ, இங்கே உட்கார்ந்திருக்கும் ஊழியர்களில், இக்கட்டிடத்தில் 3 அல்லது 4 பேர்களை எனக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், உங்கள் யாவரையும் தேவன் அறிந்திருக்கிறார். அது உண்மைதானே? அவர் உங்கள் யாவரையும் அறிந்திருக்கிறார். 44இப்பொழுது, இங்கே நின்றுக் கொண்டிருக்கிற, இந்த அம்மாவை, பரலோகத்தின் தேவன் அறிந்திருக்கிறார், எனக்கு தெரிந்தமட்டில், நான் அவளை , என் ஜீவியத்திலேயே கண்டதில்லை. நாம் அந்நியர்கள் இல்லையா அம்மா? நாங்கள் முற்றிலுமாக அந்நியர்கள். ஆம், தேவன் அவளை அறிந்திருக்கிறார். இப்பொழுது, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும், மாறாதவராயிருப் பாரானால், நாம், இப்பொழுது, காட்சியை மாற்றுவோம். ஒரு ஸ்திரியை குறித்து கண்டறிய, அவர் சென்றபோது, அவர் நேற்று என்னவாயிருந்தார், தாகத்துக்கு தா, என்று சொன்னார். அவள், யூதர்கள் இப்படி சமாரியர்களோடு பேசுவது வழக்கமல்லவே, என்றெல்லாம் சொன்னாள். ஆனால், இயேசுவானவர், சிறிது நேரம் அவளோடு பேசிக்கொண்டிருக்கும்போதே, அவளுடைய தொல்லை எங்கிருக்கிறது என்பதை, அவர் கண்டறிந்தார். அது சரியா? நல்லது, இப்பொழுது, இயேசுவானவர் மரித்தோரிலிருந்து எழும்பி, இப்பொழுது, நமக்குள்ளாய், இன்றிரவு ஜீவித்துக்கொண் டிருக்கிறார். இன்னும் கொஞ்சம் காலத்திலே உலகம் என்னை காணாது நீங்களோ என்னை காண்பீர்கள், ஏனென்றால் நான், நான் என்பது ஒரு நபரை குறிக்கும் பிரதி பெயராய் இருக்கிறது) உங்களோடு கூட, உங்களுக்குள்ளாகவும், உலகத்தின் முடிவு பரியந்தம், இருப்பேன் என்றார். அது சுவிசேஷ உண்மை. ஒருவேளை, அதை நீங்கள் அந்த விதானத்தில் படிக்காமல் இருந்திருக்கலாம், அல்லது, அந்த விதமாய் நினைத்திருக்கலாம், ஆனால், அந்த விதமாகத்தான், வேதத்தில் எழுதப்பட்டிருக் கிறது. அதாவது, உங்கள் வேதசாஸ்திரம் அதை, எங்கேயோ கடத்தி விட்டது. ஆனால், அந்த விதமாகத்தான் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. நான், உங்களோடு கூட இருப்பேன், உங்களுக்குள்ளே இருப்பேன், உலகத்தின் முடிவுபரியந்தம் இருப்பேன். 45இப்பொழுது, ஏதோ ஒன்றுக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன், என்று உங்களுக்கு தெரியும். அது உண்மை. நான் காத்துக்கொண்டிருப்பது, கர்த்தருடைய தூதனுக்காக, அது உண்மை. இங்கே, அமர்ந்திருக்கின்ற உங்கள் ஒவ்வொரு வரையும் போன்றே, நானும் எதையும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறேன், சொல்லபோனால், குறைகாணுகின்ற வர்களும், இங்கே அமர்ந்திருக்கின்றனர். என்னுடைய கூட்டங்களை அறிந்தவர்கள், எத்தனை பேர், அவருடைய படத்தை பார்த்திருக்கிறீர்கள் என் கூட்டங்களை பற்றி அறிந்தவர்கள், விஞ்ஞான ரீதியாக எடுக்கப்பட்ட, அந்த மகத்தான வெளிச்சத்தின் படத்தை பார்த்திருப்பீர்கள். அதே வெளிச்சம் உள்ளே வருகிறது, அதை நீங்கள் கவனிக்கலாம். ஆம், உங்களில் அநேகர், அதை பார்த்திருக்கக் கூடும். ஓ, அந்த படம் ஆயிரக்கணக்கில் விற்கப்பட்டி ருக்கிறது. ஹூஸ்டன் டெக்ஸாசிலுள்ள டக்லஸ் ஸ்டியோவில் அமெரிக்க புகைப்பட ஆராய்ச்சியாளர்களில் மிக சிறந்த நிபுணரான ஜியார்ஜ் ஜெ. லேசி என்பவர் அதை கொண்டு போய் பரிசோதனை முதலான யாவற்றையும் செய்து, அது இரண்டு முறையில் எடுக்கப்பட்ட படமா, அல்லது வேறு எதாவது காரியமா, என்று பரிசோதித்து பார்த்தார். இயேசு கிறிஸ்து தாமே, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்பதை நிரூபித்தார். 46இப்பொழுது, அவருக்காக, நான் காத்திருக்கிறது நிச்சயம் தான். இன்றிரவு, அவர் எனக்கு உதவி செய்வாரா, எனக்கு அது தெரியாது. நான் எதையாவது பெருமையாக கூறுவேனானால், அல்லது வரம்பு மீறி எதையாவது சொல்லியிருப்பேனானால், தேவன் என்னை மன்னிப்பாராக. நான், அந்த நோக்கத்தோடு சொல்லவில்லை, இருதயத்தில் தாழ்மையோடு, இயேசு கிறிஸ்துவுக்கு பிரதிநிதியாக இருக்கிறேன், என்ற அர்த்தத்தில் பேசினேன். இப்பொழுது, அவர், நான் கூறுவதை கேட்டுக்கொண்டிருக் கிறார். அவருடைய இரக்கம், இன்றிரவு இங்கு இருப்பதாக, அப்படியிருப்பதினால் தான் நான் இந்த காரியங்களையெல்லாம் பேசினேன், நான், அவருடைய வார்த்தையில் இருப்பதால், அவர் வந்து எனக்கு உதவி செய்வார் என்பது, என்னுடைய ஜெபமாயிருக்கிறது. 47இப்பொழுது, ஆர்கன் வாசிப்பவர் இங்கு எங்காவது இருக்கிறாரா? அவளால் கூடுமானால், அமைதலாக, மெதுவாக, நம்பிடுவாய், நம்பிடுவாய் என்ற பாடலை இசைக்கவும். எல்லாரும் தயவு செய்து உங்களால் கூடுமானால், ஜெப சிந்தையோடுஇருக்கவும். கேட்டுக்கொண்டா லொழிய, நீங்கள் தலைவணங்கி இருக்கவேண்டாம். இப்பொழுது, ஜெப வரிசையில் வருகின்ற நீங்கள், அவர் உங்களை கடிந்துகொள்வாரானால், அது உண்மையா யிருக்கும். அவ்விதமாய், அது இருக்கும் பட்சத்தில், நீங்கள் தாங்கிக்கொள்ள ஆயத்தமாயிருக்கவேண்டும். இக்கூட்டதார் எவரிடமாவது, அவர், எதையாகிலும் சொல்வாரானால், அது, நான் அல்ல, என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். போய் அதை சரிபடுத்துங்கள் அது அவரே. நீங்கள், சுகத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னதாக, நீங்கள் செய்யக்கூடிய முதலாவது காரியம், அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். நீங்கள், சுகவீனமாகி, நிலைமாறி, ஒரு வைத்திரிடம் போய், அவர், உங்களுக்கு 'ஆஸ்பிரின் கொடுப்பாரானால், அவர், ஒரு நல்ல வைத்தியன் அல்ல, அவர் உங்களை தவிர்க்க பார்க்கிறார். அவர் ஒரு நல்ல வைத்தியனாய் இருப்பாராகில், காரணம் என்னவென்று கண்டுபிடிக்குமட்டாய், ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருப்பார். அதற்கு பின்னர், அதிலிருந்து வேலை செய்ய துவங்குவார். 48அதே காரியத்தைத்தான், நாம் இங்கு செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். ஒரு அசுத்த ஆவியாயிருக்குமாயின், அறிக்கை செய்யப்படாத பாவமாயிருக்கு மாயின், அல்லது ஏதோ காரியம், அல்லது தேவனுடைய சித்தத்திற்கு புறம்பான காரியமாயிருக்கு மாயின், நீங்கள், இரவு முழுவதுமாய் அவர்களை அபிஷேகித்து, சத்தமிட்டு, கூக்குரலிட்டு, விரும்புகின்ற எல்லாவற்றையும் செய்யலாம். ஆனாலும் அந்த பிசாசோ, அங்கேதான் தரித்திருக்கும். அது உண்மை . அவனுக்கு, அதை செய்ய உரிமையிருக்கிறது. ஆனால், அதைத்தான் நீங்கள் கவனிக்கவேண்டும். எதோ ஒரு காரியத்தின் நிமித்தம், யார் பேரிலேயோ, தேவன் ஒரு சாபத்தை போட்டிருக்கிறார், அப்படியிருக்க, நீங்கள் இடையில் வந்து, அதை எடுத்துபோடுகிறீர்கள், அப்பொழுது, மோசேக்கு நடந்ததுபோன்று, நீங்கள் தொல்லைக்குள்ளாகிறீர்கள். அது சரி. பரிசுத்த ஆவியாக அவர் இங்கே இருக்கிறார். இப்பொழுது, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இங்கிருக்கின்ற யாவரையும், தேவனுடைய மகிமைக்காக, என்னுடைய கட்டுப்பாட் டிற்குள் எடுத்துக்கொள்கிறேன்.) 49இப்பொழுது, சகோதரியே, ஒரு நிமிடம் நான் உங்களோடு பேச விரும்புகிறேன், ஏதோ காரியம் நடந்துகொண்டிருக்கிறது என்று, நீங்கள் உணர்கிறீர்கள், நிச்சயமாக, பாருங்கள், பாருங்கள் அது இப்பொழுதுதான் சம்பவித்தது. இப்பொழுது, அது உண்மை யென்றால், உங்களுடைய கரத்தை உயர்த்தி, ஜனங்கள் அதை காணும்படியாய் செய்வீரா? அது உண்மை புரிகின்றதா? அதுதான், அது அவருடைய பிரசன்னம். அது உண்மை புரிகின்றதா? இப்பொழுது, நான் உங்களுக்கு ஒரு அந்நியன், என் ஜீவியத்தில் உங்களை கண்டதே கிடையாது. இப்பொழுது, நான் பேசிக்கொண்டிருக்கிற அந்த பரிசுத்த ஆவியானவராகிய இயேசு கிறிஸ்து, நேற்றும் இன்றும் என்றென்றும் மாறாதவராயிருக்கும் பட்சத்தில், நான் அதை உண்மையான சாட்சியாகவும், சத்தியமென்றும், மக்களுக்கு அறிவித்து, அவர் அதே மாறாதவராக இருந்து, உண்னை குறித்து ஏதாகிலும் ஒன்றை, எனக்கு வெளிப்படுத்தி, நான் அதை உனக்கு அறிவித்தால், அது நீ விசுவாசிக்க, உனக்கு உதவியாய் இருக்கும் அல்லவா? இங்கே, நீங்கள் ஏதோவொரு தேவையோடு வந்திருக்கலாம். எனக்கு தெரியாது. ஆனால், அவருக்கு தெரியும். இப்பொழுது, அதை அறிவிக்க தேவன் அனுமதிப்பாரானால், நீங்கள் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்வீரா? அல்லது உங்களுடைய தேவை எதுவாகயிருந் தாலும், பணமோ, அல்லது அவரிடத்தில் நீங்கள் தேடி வந்தது எந்த காரியமாயிருந் தாலும், அல்லது எதை குறித்தாவது கேட்கும்படியாக வந்திருந்தாலும், அல்லது குடும்ப பிரச்சனையாயிருந்தாலும், வேறு எந்த காரியமாயிருந்தாலும், அது எந்த காரியமாயிருந்தாலும், அவர் அதை அறிவார். அதை அவர், எனக்கு அறிவிக்கபோதுமானவராயிருக்கிறார். அது சரிதானே? அப்படியாகும் போது அந்தஅது ஸ்திரீயிடம் பேசிய, அவராகவே தான் அது இருக்கவேண்மென்று அதை காட்டுகிறது. கிணற்றண்டையில் அந்த ஸ்திரீயிடம் பேசிய, அவர்தான் அது என்று காட்டுகிறதாய் இருக்கும். ஆம், அவர் செய்ததுபோன்றே, இப்பொழுது, நான் உன்னுடைய ஆவியோடு தொடர்புகொள்ளும்படியாக, நான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள், என்னை விட்டுவிலகிபோகின்றதை நான் காண்கின்றேன். நீங்கள், — நீங்கள், உங்களுக்கு ஏதோ ஒருவிதமான, ஒரு மகத்தான மோதல் நடந்திருக்கிறது; அது ஒரு விபத்து, அது ஒரு கார் விபத்து, இதுபோன்று, நீங்கள் ஆகாயத்தில் தூக்கி எரியப்பட்டீர்கள். அது உங்களுக்கு, ஏதோபாதிப்பை உண்டாக்கியிருக்கிறது, அது எங்கோ கழுத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதன் விளைவாக கழுத்தில் உங்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது. ஆம், நீங்கள் ஏதோவிதமான, ஒரு வேதபாட போதகி. இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார், என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பிதாவே, தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய வார்த்தையின் மேல் உள்ள அதிகாரத்தினால், மரித்து கொண்டிருக்கிற, அந்த ஸ்திரீயினிடத்திலி ருந்து, அந்த பொல்லாத காரியத்தை வெளியேறும்படி கேட்கிறேன். சாத்தானே, உன் முகத்திரை கிழிக்கப்பட்டது. அந்த ஸ்திரீயை விட்டு வெளியே வா. ஏனென்றால், ஜீவிக்கின்ற தேவனுடைய சபையானது, உன்னை வெளியே போகும்படி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறது. ஆமென். இப்பொழுது, சகோதரியே, ஒரு நொடி. நான் உன்னோடு பேச விரும்புகிறேன். நிச்சயமாக, அது, உன்னை விட்டு போய்விட்டது என்று உனக்கு தெரியும். அது அந்த விதமாகத்தான் அங்கு இருக்கும். உங்களுடைய தொண்டை எப்படி இருக்கிறது? பாருங்கள். அது அவளை விட்டு நீங்கிப்போயிற்று. அந்த வீக்கம், அவள் தொண்டையை விட்டு போய்விட்டது. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, உங்கள் வழியே நீங்கள் போய், தேவனுக்கு நன்றியாயும், சந்தோஷமாயும், களிகூர்ந்து கொண்டும் இருங்கள், நீங்கள் போகலாம். 50கர்த்தராகிய இயேசுவில் விசுவாசமாய் மட்டும் இருங்கள். இந்த காரியங்களை யெல்லாம் சிந்திகையிலே, நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் சிந்தனையின் மையத்தில் வையுங்கள். அவர்கள், அந்த காரியங்களை குறித்து, சிந்தித்துக் கொண்டிருக்கையிலே அவர்கள் ஏகசிந்தை - யுள்ளவர்களாயிருந்தார்கள். நினைவிருக் கட்டும், இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாவராயிருக்கிறார். அவர் இன்றைக்கும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது விசுவாசமுள்ளவர்களா யிருங்கள், இந்த பக்கமாய் பாருங்கள் குழுமியுள்ளவர்களே, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், உங்களுடைய சிதறாத கவனத்தை எனக்கு கொடுங்கள், ஜெபத்தில் இருங்கள். தேவன் மேல் விசுவாசமுடையவர்களாயிருங்கள். இப்பொழுது, இவள் தான், அந்த ஸ்திரீ என்று நினைக்கிறேன். இவள் தான், அந்த நோயாளியா? சரி, சகோதரியே, சற்று அருகில் வாருங்கள். நிச்சயமாக, அது உங்களை புண்படுத்தாது. அது அவருடைய பிரசன்னம் பாருங்கள், அதை நீங்கள் உணர்கிறீர்கள்.“ கூடியுள்ளோரே, நான் உங்கள் சகோதரன், இது ஒன்றும் மனோதத்துவம் அல்ல. அது, கூடியுள்ளோர் மத்தியிலிருந்து வருகிறது என்று நான் உணர்கிறேன். அது அப்படியல்ல; அது, சர்வ வல்லமையுள்ள தேவனாயிருக்கிறது. புரிகின்றதா? அது ஒன்றும் மனோதத்துவம் அல்ல. இல்லை. அது அப்படியல்ல, அப்படி எண்ணாதீர்கள். அதை செய்வது, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று ஏகசிந்தையாயிருங்கள். 51இப்பொழுது, சகோதரியே, உங்களோடு நான் சற்று பேச விரும்புகிறேன். நாம் அந்நியர்கள், என்று நான் கருதுகிறேன். ஆனால், இயேசு கிறிஸ்து நாம் இருவரையும் அறிந்திருக்கிறார். பூமியின் மேல் இன்று தான், நாம் முதன்முறையாக சந்திக்கிறோம். ஆனால், அவர் உங்களை அறிந்திருக்கிறார், உங்கள் ஜீவிய காலமல்லாம், அவர் உங்களை போஷித்தி ருக்கிறார். அவர் என்னை அறிந்திருக்கிறார். உங்களுடைய சகோதரனாகிய நான், அவருடைய கிருபையினால், ஒரு தெய்வீக வரத்தின் மூலமாக வருகிறதில்... அதோடு, நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் பிறந்து, ஒரு சிறு குழந்தையாய் இருந்தபொழுது, எனக்கு ஞாபகத்துக்கு கொண்டுவரக்கூடிய முதலாவது காரியம், ஒரு தரிசனம்தான். இப்பொழுது, ஒரு நிமிடம் இந்த பக்கமாக பார்க்கவேண்டுமென்று, நான் விரும்புகிறேன். நிச்சயமாக, நீங்கள், சுகவீனமாகயிருக்கிறீர்கள். நீங்கள் ஏதோ காரியத்தால் அவதிப்படுகிறீர்கள்; அது உங்களை சுற்றியுள்ள, ஒரு கருப்பு ஆவியாயிருக்கிறது; அது மரணமாயிருக் கிறது. அது புற்றுநோயின் ரூபத்திலிருக் கிறது. அந்த புற்றுநோய், உங்களுடைய மார்பகத்திலிருக்கிறது. சிறந்த யாரோ ஒருவரால், நீங்கள் பரிசோதிக்கப்பட் டிருக்கிறீர்கள். நீங்கள், ஒரு பாதிப்படைந்த நிலையில் இருக்கிறீர்கள். அந்த பிளவு , உங்களுடைய குடல்களிலிருக்கிறது. உங்களுக்கு, வயிற்று கோளாறு கூட இருக்கிறது. ஒரு கடுமையான இருதயவலி, உங்களுக்கு மயக்கத்தை உண்டாக்கியிருக் கிறது. இங்கே, சில நாட்களுக்கு முன்பு, நீங்கள் பக்கவாட்டில், உங்கள் படுக்கையின் மேல், ஒரு பக்கமாக இருந்தீர்கள், ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டேயிருந்தீர்கள், ஏறக்குறைய , அப்போது மரித்துவிட்டீர்கள். அந்த காரியங்கள் யாவும் உண்மைதானா? அவையாவும் உண்மையே... சரி, அது என்னவாகயிருந்தாலும், நிச்சயமாக அவைகளெல்லாம் உன்னைவிட்டு போய்விட்டது. 52ஆனால், உங்கள் ஜீவியத்தை அறிந்திருந்த, அவரை குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அது இயேசு கிறிஸ்துவா?அது உண்மையென்று, நீங்கள் ஏற்றுக் கொண்டீரா? உங்களுக்கு நன்றி. நீ ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கிறாய். ஏதோ இயற்கைக்கு மேம்பட்டது இங்கு இருக்கிறது என்று, நீங்கள் அறிந்திருக்கிறீர் கள். நான், வார்த்தையிலிருந்து எடுத்து பிரசங்கித்தது போன்று, கர்த்தராகிய இயேசுதான் என்று, நீங்கள் விசுவாசித்தால், அது கர்த்தராகிய இயேசுதான் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கே, ஒரு இருண்ட ஆவி இருக்கின்றது . என்று, நான் அறிவேன். அது உங்கள் மேல் தொங்கிக்கொண்டிருக் கிறதை , நான் காண்கிறேன். அது மிகவும் அபாயமானது. நான், உங்களை காண்கிறேன்...உங்களுடைய பெயர், ஈவா. உங்களுடைய கடைசி பெயர், யார்க். நீங்கள், இந்த பட்டணத்தில் வசிக்கிறீர்கள். உங்களுடைய வீட்டு எண்,613, 6வது தெரு, அது சரிதானே. நீங்கள், சுகமாயிருக்கும்படி வீட்டிற்கு போகிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், அவள் போய் சுகமடைவாளாக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சந்தேகபடாதே, களிகூர்ந்து, சந்தோஷத்தோடே போய், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் நம்பிக்கையாயிருங்கள். 53சந்தோஷத்தோடே போய், விசுவாச முடையவர்களாயிருங்கள், சந்தேகப்படா திருங்கள், ஓ, முன்னிலும் கேடான தொன்றும், உனக்கு சம்பவியாதபடிக்கு, இனி பாவம் செய்யாதே, என்று வேதவார்த்தை கூறுகிறது. அவிசுவாசமே பாவம். குடிப்பது, புகைப்பது, சூதாடுவது போன்றவைகள் பாவம் அல்ல. அவைகள் பாவத்தின் தன்மைகளாயிருக்கிறது. நீங்கள், விசுவாசிக் காதபடியால் அதை செய்கிறீர்கள். இயேசு சொன்னார், போ இனி பாவம் செய்யாதே அல்லது அவிசுவாசியாதே இல்லையேல் முன்னிலும் கேடானதொன்று, உன்மேல் வரும் என்றார். தேவனில் விசுவாச முள்ளவர்களாயிருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும், அவரை விசுவாசியுங்கள். 54ஒளியானது, இன்னமும்,அந்த ஸ்திரியை பின்தொடர்கிறதை காண்கிறேன். இப்பொழுது போன ஸ்திரியா அது. அங்கிருக்கின்ற, அந்த கருத்த நபரின் மேலே, அது தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆம், அந்த ஸ்திரி,பித்தப்பை, மற்றும் தன் குடலில் கோளாறு உடையவளாயிருக் கிறாள். ஏதோ வெள்ளையான காரியத்தை , உன் கழுத்தை சுற்றிலும் அணைத்து, உட்கார்ந்திருக்கிற ஸ்திரீயே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன்னை சுகமாக்குகிறார், என்பதை விசுவாசிக்கிறாயா? நீ உன் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீங்கள், எழும்பி நின்று, உங்கள் சுகத்தை உரிமை கோரி, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சுகமடைவீர்களாக! கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! தேவனில் விசுவாசமுள்ளவர்களா யிருங்கள். நீ விசுவாசிக்கிறாயா? அங்கு உட்கார்ந்திருக்கிற உங்களுக்கு, குடல் இறக்க வியாதி, இருக்கிறது இல்லையா, ஐயா, நீங்கள், அங்கே உட்கார்ந்துகொண்டு, கர்த்தாவே அந்த மனிதர் என்னோடு பேசுவாரா என்று ஜெபித்துக்கொண்டிருக்கிறீர்கள். அது சரிதானே? அது மெய்தான் என்றால், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். எழுந்து நில்லுங்கள், சகோதரனே, உங்களுடைய விசுவாசம், உங்களை சுகப்படுத்தியது. வீட்டிற்கு கடந்து செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களை சுகப்படுத்துகிறார். 55அதே கர்த்தராகிய இயேசு ... நீங்கள், இங்கு மேடைக்கு வரவேண்டிய அவசியமில்லை; உங்களுக்கு தேவை யானது விசுவாசமே. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு, தேவனை விசுவாசித் தால், நீங்கள் கேட்டுக்கொள்வ தெதுவோ, அதை பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் விசுவாசிக்க மட்டும் செய்தால், இயேசு கிறிஸ்து, அதை உங்களுக்கு, அருளச் செய்வார். ஆனால், உங்களிடத்தில் விசுவாசம் இருக்க வேண்டும். நீங்கள், உங்கள் முழு இருதயத்தோடும், அவரை விசுவாசிக்க வேண்டும், தேவன், அதை நிறைவேறு தலுக்குள் கொண்டுவருவார். 56வியாதியஸ்தரே... ஐயா, என்னை பொறுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் உங்கள், முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர் களா? அப்படியாகவே, விசுவாசிக்கிறீர்களா? ஏனென்றால், இப்பொழுது, அவர் இங்கு நின்றுக்கொண்டிருப்ப தினால், உண்டான பிரசன்னம், உங்களை சற்று, உற்சாகமடைய செய்திருக்கிறது. நீங்கள், இந்த பட்டணத்துக்கு வெளியே இருந்து வருகிறீர்கள், என்று நம்புகிறேன். நீங்கள், உங்கள் தலை நகர பட்டணம், அதாவது ரிச்மென்ட் வெர்ஜீனியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு புற்றுநோய் இருக்கிறது, அது, உங்கள் வாயின் உட்புறத்தில் உள்ள, தாடையின் மேல் இருக்கிறது அது சரிதானே? நீங்கள், சுகமடைந்து வீட்டிற்கு செல்ல விரும்புகிறீர் களா? இயேசுவை, உங்கள் சுகமளிக்கிற வராக ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், அது, அந்த மனிதனை விட்டு, கடந்து போவதாக! அவனை விட்டு வெளியே போ! ஆமென். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக! ஐயா! விசுவாசித்துக்கொண்டே போங்கள். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்? நான், உங்களை வாலிபமான நபராக இருக்கிறதை பார்க்கிறேன். இப்பொழுது, எனக்கு முன்பாக நிற்பதைக்காட்டிலும், வாலிபமாக காணப்படுகிறீர்கள். நீங்கள், ஏதோ ஒருவித தலைவலியினால் கஷ்டப்படுகிறீர்கள். அது, அநேக வருடங்க ளுக்கு முன்பாக, ஏறக்குறைய, 25 வருடங்க ளுக்கு முன்பாக, அந்த தலைவலி ஆரம்பித்து, அன்று முதல், அது உங்களை தொல்லைபடுத்தி வருகிறது. நீங்கள், ஒருமகத்தான விசுவாசியாக இருக்கிறீர்கள். மேலும், நீங்கள் இங்கு நின்றுக்கொண்டி ருக்கும், இந்த வேளைக்காக ஜெபித்தீர்கள். நீங்கள் தேவனிடத்தில் ஜெபித்தபோது, தேவனே, நான் மட்டும், இந்த கூட்டங்களுக்கு வர முடிந்து, சகோதரன் எனக்காக ஜெபம் செய்தால், இந்த தலைவலி என்னை விட்டு நீங்கிப்போகும், என்று நீர் ஜெபித்தீர். அந்த காரியங்கள் உண்மை தானே? அது உண்மைதான். 57இப்பொழுது, என்ன சொல்லப்பட்டது என்பதை கேட்டீர். அது, நான் அல்ல... அந்த சத்தம் மட்டுமே என்னுடையது. அது என்னவாகயிருந்தாலும் சரி, நான் ஏதோ காரியத்தை அல்லது ஒரு வாலிபமான நபரை கண்டது, எனக்கு ஞாபகமிருக்கிறது. சொல்லப்பட்டவிதமாகத்தான், அந்த காரியங்கள் இருந்ததா? அது, சொல்லப்பட்ட விதமாகத்தான் இருக்கும். இப்பொழுது, தேவன் அதை செய்தார் என்று, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள்,தேவனை விசுவாசிக்கிறீர்களா? தேவன் இங்கே இருக்கிறார் என்று, நிச்சயமாய் நீங்கள் அறிவீர்கள். ஒரு நிமிடம், நான் வேறு எதையோ காண்கிறேன். ஒரு வாலிபமான ஸ்திரீ, உன் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பதை காண்கிறேன். அது, உன்னுடைய மகள், ஆம், எங்கோபயணமாக போக, ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அவளை பார்க்க போய்க்கொண்டிருக்கிறீர்கள். அவள் இண்டியானவை சேர்ந்தவள். ரிச்மாண்ட் இண்டியானவில், அவள் ஜீவிக்கிறாள். அவளுடைய புருஷன், ஒரு ஊழியக்காரன். அவள், உனக்கு ஒரு கடிதம் எழுதியிருக் கிறாள். நான் இங்கு வருவதால், உங்களை, அங்கே வரவேண்டாம் என்று எழுதப்பட்டி ருந்தது. அது சரிதானே, நீங்கள் சுகமாக்கப்பட்டீர்கள். நீங்கள் விசுவாசித்துக் கொண்டே உங்கள் வழியே போகலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.- இப்பொழுது, விசுவாசித்தால் மட்டும் போதும், தேவனில் விசுவாசமுள்ளவர்களா யிருங்கள். இயேசு கிறிஸ்து. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். இப்பொழுது. விசுவாசமுள்ளவர்களாய், நம்பிக்கையாயிருங்கள். 58சத்தமிட்டுக் கொண்டிருக்கின்ற, எனதருமைகருப்பின் மக்களே! தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் விசுவாசிக்கும்போது, தேவையுள்ளவர் களுக்கு அவர், எப்பொழுதும் உதவி செய்ய ஆயத்தமுள்ளவராயிருக்கிறார். ஒரு நிமிடம், அந்த சீமாட்டி, இப்பொழுது அந்த மூலையில், பரிசுத்த ஆவியானவர், நின்றுக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அது, ஒரு கருப்பின ஸ்திரீயின் மேலாக இருக்கிறது. அவள், இந்த பக்கமாக பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள்,அங்கே ஜெபித்துக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏதோ, ஒரு தசை வளர்ச்சி தொண்டையில் காணப்படுகிறது. அவள் தனது கரத்தை உயர்த்தி இருக்கிறாள். ஸ்திரீயே, நீ உன் சுகத்தை ஏற்றுக்கொள்கிறாயா?“, சரியாக உங்களுக்கு பின்னே உட்கார்ந்திருக்கிற அந்த ஸ்திரீக்கும் கூட, அதே தசைவளர்ச்சி அவளுடைய தோள்பட்டையில் இருக்கிறது. அது சரிதானே அம்மா? நீங்கள் இருவரும் எழும்பி நில்லுங்கள், தசைவளர்ச்சியுள்ள இரண்டு ஸ்திரீகள் அங்கு இருக்கிறார்கள், இருவரும் கருப்பினத்தவர்கள். இயேசு கிறிஸ்து உங்கள் இருவரையும் சுகமாக்கு கிறார். நீங்கள் வீட்டிற்கு போகலாம், தேவனுடைய மகிமைக்காக சுகமாவீர் களாக. உங்களுடைய விசுவாசம் உங்களை சுகபடுத்தியது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதுபோய் விட்டது. 59தேவனில் விசுவாசமுள்ளவர்களாயி ருங்கள். அவிசுவாசியாயிராதேயுங்கள். ஆனால் விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லா காரியங்களும் கைக்கூடும். ஆமென். என்னே, இந்த கட்டிடத்தில் எப்பேர்பட்ட ஒரு விசுவாச வங்கி இருக்கிறது. இந்த கட்டிடம் முழுவதும் அசலான பால் போன்ற வெண்மை சூழ்ந்து காணப்படுகிறது. இப்பொழுது, நீங்கள் உண்மையாகவே கர்த்தருடைய ஆவிக்குள்ளாயிருக்கிறீர்கள். “எதுவேண்டுமானாலும் இப்பொழுது சம்பவிக்கலாம்...?...” 60எப்படியிருக்கிறீர்கள் அம்மா? என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் என்ன சொல்லுகிறேன் என்றால், தீர்க்கதரிசி என்பவன் ஒரு பிரசங்கியாயிருக்கிறான். எதிராளியை சேர்ந்தவர் என்று எதிர்பார்க்காமல், நான் தேவனை சார்ந்தவர் என்று எதிர்பாருங்கள். அந்தவிதமாகத்தான் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்கிறீர்களா? நல்லது சரி அப்படியானால், என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். ஏனென்றால் அவர் என்னிடத்தில் நான் மட்டும் மக்கள் என்னை விசுவாசிக்கும்படி செய்து, உத்தமமாய் நான் ஜெபித்தால் அந்த ஜெபத்திற்கு முன்பாக எதுவும் நிற்கமுடியாது என்று கூறியிருக்கிறார். மேலும் உங்களுக்கு உதவி செய்வது நானல்ல சுகத்தைகொடுக்கிறவர் தேவனே. நான் அவரிடம், அவர்கள் என்னை விசுவாசிக்கமாட்டார்களே என்று கேட்டேன். அதற்கு தேவன், மோசே தீர்க்கதரிசிக்கு இருந்தது போன்று உனக்கு இரண்டு அடையாளங்கள் கொடுக்கப்படும். இந்த அடையாளங்களினால் ஜனங்கள் உன்னை விசுவாசிப்பார்கள் என்றார். அவைகளில் ஒன்று ஜனங்களின் இருதயங்களின் இரகசியங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவது. நீங்கள் இங்கே வந்திருப்பது உங்களுக்காக அல்ல, இருந்தாலும் நீ பயந்துபோய் பெலவீனமாயிருக்கிறாய். ஆனால் அது இந்த பிள்ளையின் வியாதியின் காரணமாக வந்திருக்கிறது. இங்கிருக்கின்ற இந்த குழந்தை கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, அது மரித்து போகும்படியாய் வைத்தியர் களால் கைவிடப்பட்டுள்ளது. அதுலிக்கூயிமியா. அது சரிதானே? நீங்கள் இந்த பிள்ளையை பட்டிணத்திற்கு வெளியேயிருந்து கொண்டு வந்திருக்கிறீர்கள். நீங்கள் மேற்கிலிருந்து பிராயாணம் செய்து கிழக்கிற்கு வந்திருக்கி றீர்கள். மலையிலுள்ள ஒரு தேசத்திலிருந்து வந்திருக்கிறீர்கள், அது பென்சில்லேனியா. உன்னுடைய பட்ணம் சேம்பர்ஸ்பெர்க் என்று நினைக்கிறேன், அது சரிதானே? அந்த பிள்ளையை என்னிடம் கொண்டு வாருங்கள். 61சிறிய சகோதரியே அன்பே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இங்கே இருந்தால், அவர் கரத்தை உன்மேல் வைப்பார், மரணம் உன்னைவிட்டு நீங்கிப்போய் நீ ஜீவிப்பாய். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீவிசுவாசிக்கிறாயா? அப்படியானால் அவருக்கு பதிலாக நான் என்னுடைய கரத்தை இந்த பிள்ளையின்மேல் வைத்து அதை ஆசீர்வதித்து அந்த பிசாசு வெளியேறும்படியாகவும் அந்த ஜீவன் பிள்ளைக்குள்ளாய் திரும்பவரும் படியாகவும், நான் கேட்பேன் அப்பொழுது அது சுகமடைந்து ஜீவிக்கும். சாத்தானே, அந்த பிள்ளையை விட்டு வெளியே வா. தேவனுடைய வேதத்தின் அதிகாரத்தினாலும், ஒரு தூதனால் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரு தெய்வீக வரத்தைக்கொண்டும், அந்த பிள்ளையை விட்டுபோகும்படியாய் நான் உனக்கு கட்டளையிடுகிறேன். அதிலிருந்து வெளியே வா. ஆமென். இப்பொழுது, நீ சுகமடைய போகிறாய் என்று, நீ விசுவாசிக்கிறாய் அல்லவா? சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அப்படியே திரும்பி, ஜனங்களுக்கு கையை அசைத்துக்காட்டு. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அபாரமான விசுவாசத்தை உடைய பெண்ணே, சுகமாயிரு, தேனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. போய், நீ எனக்கு, ஒரு கடிதம் எழுது. 62அவருடைய தீர்க்கதரிசி என்று, அவருடைய ஊழியகாரன் என்று. நீ என்னை விசுவாசிக்கிறாயா? தேவனும், அவருடைய ஆவியும், அருகில் இருக்கிறது என்று, நீ விசுவாசிக்கிறாயா? இப்பொழுது சம்பவித்துக்கொண்டிருக்கிறது, கர்த்தராகிய இயேசுவினால் என்று நம்புகிறாயா? நான் அல்ல, நான் ஒரு மனிதன். ஆம், உங்களில் உள்ள கோளாறு என்னவென்று தேவன் ஒரு நிரூபணமாக எனக்கு வெளிப்படுத்தும் பட்சத்தில், சத்தியத்தை வெளிப்படுத்துகிற, அவருடைய தீர்க்கதரிசியாக நான், இங்கு நின்றுக் கொண்டிருக்கிறேன் என்று, நீங்கள் விசுவாசிப்பீர்களா? கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயினிடத்தில் உன் புருஷனை அழைத்துக்கொண்டு வா என்று சொன்னபோது. ''எனக்கு புருஷன் இல்லை'' என்று அவள் சொன்னாள். அவர், ''உனக்கு ஐந்து புருஷர்கள்'' இருந்தார்கள் என்றார். அதற்கு அவள், ''ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி'', என்று நான் காண்கிறேன், என்றாள். பாருங்கள்? ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று, நான் உணர்கிறேன் என்றாள். அந்த, தேவனுடைய குமரான்மேல் இருந்த, அதே ஆவியை, பரிசுத்த ஆவியின் ரூபத்தில் திரும்ப அனுப்புவதாக, அவர் வாக்களித்திருக்கிறார். அந்த ஆவியானவர் நம்மோடும், நமக்குள்ளாகவும், உலகத்தின் முடிவுபரியந்தம் ஜீவிப்பார். நீங்கள், அதை விசுவாசிக்கிறீர்களா? உங்களுடைய கஷ்டங்களை, அவரால் அறிந்துகொள்ள முடியும், அவரால் முடியும், இல்லையா? உங்களுக்கு இருதயநோய் இருக்கிறது. அது சரிதானே? இருதயநோய் உள்ள யாவரும், இப்பொழுது எழுந்து நில்லுங்கள். உங்களு டைய இருதயநோயுடன் உங்களுடைய காரியம் என்னவாயிருந்தாலும் சரி நீங்கள் இப்பொழுதே சுகமாக்கப்படமுடியும். 63தேவனாகிய கர்த்தாவே, எங்களுடைய பெலனையும், நாங்கள் எவ்வளவு நலிந்தவர்கள் என்றும், எவ்வளவு பெலவீனர்கள் என்றும் நீர் அறிந்திருக்கிறீர். ஆனால், கர்த்தாவே நீர் எவ்வளவு பெலமுள்ளவர் என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். இருதயநோய்க்கு எங்களுடைய வைத்தியர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, ஆனால், கர்த்தாவே அந்த இருதயத்தை உண்டாக்கினது யார்? அது நீரல்லவா? இருதய நோயினால் ஜனங்களை பற்றிக்கொண்டிருக்கிற, அந்த சாத்தானின் வல்லமையை, நான் கடிந்துகொள்கிறேன். அவர்கள் ஒவ்வொருகுள்ளாகயிருந்து அவன், வெளியே வருவானக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென். 64தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. உங்களிடம், சில காரியங்களை சொல்லவேண்டுமென்று விரும்புகிறேன். நீண்ட காலத்திற்கு பிறகு, இப்பொழுது, வித்தியாசமாய் உணர்கிறீர்கள் அல்லவா? இப்பொழுது, ஒரு கருத்த ஆவி, உங்கள் மேல் இருந்ததை ஜனங்கள் அறிவர். அது, உங்களை மிகவும் மோசமாக, கஷ்டப்படுக் கைக்குள்ளாக்கி இருந்தது. மேலும், இப்பொழுது, அது உங்களிடமிருந்து போய்விட்டது. நீங்கள் சுகமடைந்தீர்கள். அதை குறித்து உங்களிடம் சொன்னேன். ஆம் ஐயா, நீங்கள் நலமாகிவிட்டீர்கள், நல்லது, தயவுசெய்து, தேவனிடத்தில் விசுவாசமுடையவர்களாயிருங்கள். ஒவ்வொருவரும் ஏகசிந்தையோடு, விசுவாசம் கொண்டிருங்கள். 65நீங்கள் எப்படி ஐயா இருக்கிறீர்கள்? சரி, நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக் கிறோம், ஆனால், கர்த்தர், நம் இருவரையும் அறிந்திருக்கிறார். அது சரிதானே? வானங்களையும், பூமியையும் உண்டாக்கின வரும், இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் பண்ணினவருமான, பரலோகத்திலிருக்கிற தேவன், மீண்டுமாய் நமக்குள் திரும்பி வந்து, அவர் செய்ததை, நாமும் கூட செய்வோம், என்று வாக்களித்துள்ளார். அவருடைய தீர்க்கதரிசியாய் நான் இருக்கிறேன் என்று, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் சொல்லுகிற தற்கு காரணம் என்னவென்றால், கர்த்தருடைய துாதனானவர் என்னிடத்தில், ஜனங்கள் உன்னை நம்பும்படியாய், அவர்கள் உன்னை விசுவாசிக்கவில்லையென்றால், அப்பொழுது, அவர்களுடைய இருதயங் களின் இரகசியங்களை நீர் அறிந்துகொள் வாய், அப்பொழுது, அவர்கள், உன்னை விசுவாசித்தே ஆகவேண்டும், என்று கூறினார். ஆனால், நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்கள். அது மட்டுமல்லாமல் நீங்கள் என்னை விசுவாசிக்கிறதின் காரணம், நீரும் கூட ஒரு சுவிசேஷ ஊழியனாய் இருக்கின்றீர், நீர் ஒரு நல்ல நோக்கத்திற்காக இங்கே வந்திருக்கிறீர். நீர் சுகவீனமாய் இல்லை, உமக்கு தேவையாயிருக்கிறது உங்களுடைய கூட்டத்தார் மத்தியில் ஒரு பழைய மாதிரியான எழுப்புதல் உண்டாக வேண்டுமென வாஞ்சிக்கிறீர், அதற்காகத்தான் நீர் ஜெபித்துக்கொண்டும் இருக்கிறீர். நம் ஒவ்வொருவருக்கும் அது தேவையாயிருக்கிறது ஒருபழைய மாதிரியான எழுப்புதலுக்காக நாம் யாவரும் எழுந்து நிற்போமாக. சர்வ வல்லமையுள்ள தேவனே, வானங்களையும், பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்த கட்டிடத்தின் உள்ளேயிருக்கும், எல்லா பிசாசின் வல்லமையையும் உடைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் வல்லமை வெளிப்படும் படியாய், நான் கேட்டுக்கொள்கிறேன். கர்த்தாவே, நாங்கள் பெலவீனர்கள், ஆனால், நாங்கள் தோல்வியடைந்தவர்கள் அல்ல, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், சாத்தானே,இந்த ஜனங்களை விட்டு வெளியே வா, நான் உனக்கு கட்டளையிடுகிறேன். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருக்கிற, முடமான மக்களே! எழும்பி நில்லுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும், அவருக்கு துதியை செலுத்துங்கள்.